Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போலீஸ் ஃபேமிலி (பட விமர்சனம் )

படம்: போலீஸ் ஃபேமிலி

நடிப்பு: ராஜா மலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, சுரேகா ஆர், காதல் சுகுமார், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம் எஸ் செல்வா

தயாரிப்பு: மலைச்சாமி ஏ எம் ராஜா

இசை: ஜெயா கே தாஸ்

ஒளிப்பதிவு: ஜெயக்குமார் தங்கவேல்

இயக்கம்: பாலு எம்

பி ஆர் ஓ : ஏ ஜான்

தாதா தனா (சரவணன்) தனது ரவுடித்தனத்தை கைவிட்டு மகனுடன் தனிமையில் வாழ்கிறார். இந்நிலையில் அவரது மகன் போலீஸில் பிடிபடுகிறான். பின்னர் கொல்லப்படுகிறான். தன் மகனைக் கொன்ற போலீஸ்காரர்களை பழிக்கு பழி வாங்க அவர்களது குடும்பத்தினரை அடியாட்களை வைத்து தனா கொல்கிறான். இந்த வேட்டையில் போலீஸ் குடும்பங்கள் தப்பித்ததா? உண்மையில் தனா மகனை கொன்றது யார்?என்ற சஸ்பென்சுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

படத்தில் தெரிந்த முகம் என்று பார்த்தால் பருத்தி வீரன் சரவணன், காதல் சுகுமார் ஆகிய இருவரை கூறலாம் மற்ற எல்லோருமே புதுமுகங்களாகத்தான் தெரிகிறார்கள். ஆனாலும் கதாபாத்திரத்தில் ஒவ்வொருவரும் ஒன்றி நடித்திருப்பதால் பார்க்க முடிகிறது.

தனாவாக நடித்திருக்கும் சரவணன் மிரட்டலாக நடித்திருக்கிறார். அதேபோல் காதல் சுகுமார் சஸ்பென்ஸ் பாத்திரத்தில் நடித்து சர்ப்ரைஸ் தருகிறார்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவாக நடித்திருக்கும் ராஜா மலைச்சாமி தன் மகள்களை ரவுடி கூட்டத்திடமிருந்து காப்பாற்ற அவர்களை காரில் அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று பதுங்குவதும் ஆனாலும் ரவுடிகள் அவர்களை சுற்றி வளைத்து தாக்குவதும் காட்சிகளை பரபரப்பாக நகர்த்துகிறது.

தந்தை பேச்சை கேட்காமல் தன் காதலன் பேச்சை கேட்டு தான் எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த இடத்தின் லொகேஷனை காதலனுக்கு சப் இன்ஸ்பெக்டர் மகள் அனிதா ஷேர் செய்து வம்பை விலைக்கு வாங்குவது ஏன் தான் இந்த மகள்கள் தந்தையை நம்பாமல் ஊதாரி காதலனை நம்புபவர்களாக இருக்கிறார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.

மலைச்சாமி ஏ எம் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜெயா கே தாஸ் இசையும்,
ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவும் ஓகே

வெறும் தாதா படமாக இல்லாமல் தந்தை பாசம், மகளின் காதல், மர்டர் மிஸ்டரி என கமர்சியல் அம்சங்களை கலந்து காட்சிகள் விறுவிறுப்பாக நகரும்படியான திரைக்கதை அமைத்து ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாலு எம்.

போலீஸ் ஃபேமிலி – போரடிக்காது.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com

Related posts

TheerpugalVirkkapadum – All set for Dec 31st release

Jai Chandran

புதிய படத்தில் சந்தானம் ஜோடியாக புதுமுகம்

Jai Chandran

கர்நாடகத்தில் நடப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது: கமல்ஹாசன் வேதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend