Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் (பட விமர்சனம்)

படம்: காதல் ரீசெட் ரிப்பீட

நடிப்பு: மதும் கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர்

தயாரிப்பு: சன்னி, டென்வி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

இயக்கம்: விஜய்

பி ஆர் ஓ : யுவராஜ்

கோடீஸ்வரன் மகள் அதிதி (ஜியா சங்கர் ). இசைக்குழு ஒன்றில் பாடகியாக இருந்து சர்வதேச புகழ் அடைய எண்ணுகிறாள். அந்த இசை குழுவிலிருக்கும் அரிச்சந்திரனை (அர்ஜுன் அசோகன்) காதலிக்கிறார். இதற்கிடையில் அதிதி மீது பத்து வயது முதலே ஆசை வைத்திருக்கிறான் சித்தார்த் (மதும் கேஷ் ). இசை போட்டியில் கலந்து கொள்ள அதிதி குழுவினருடன் ஸ்காட்லாந்து புறப்பட்டு செல்கிறாள். பின்னாலேயே சித்தார்த்தம் செல்கிறான். திடீரென்று ஏற்படும் மன உளைச்சலால் அதிதி தற்கொலைக்கு முயல்கிறாள். அவரை சித்தார்த் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுகிறான். தலையில் அடிபட்டதால் மறதி நோய்க்கு உள்ளாகிறாள் அதிதி. அவளை உடனிருந்து சித்தார்த் கவனத்து கொள்கிறான். இந்நிலையில் அதிதியின் பழைய காதலன் ஹரி சந்திரன் நிலை என்னவாகிறது. அதிதிக்கு மீண்டும் நினைவு திரும்பியதா? சித்தார்த் கதி என்னவானது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்

வழக்கமாக இயக்குனர் விஜய் குடும்பப்பாங்கான கதைகளில் அதிக கவனம் செலுத்துவார். இம்முறை முழுக்க காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதுவும் இசைக்கு முக்கியத்துவம் தந்திருப்பதால் ஹாரிஸ் ஜெயராஜை படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார். அவரும் தொடக்கம் முதல் இறுதி வரை இசை அருவியை பொழிந்து தள்ளியிருக்கிறார்.

அதிதியாக நடித்திருக்கும் ஜியா சங்கர் தமன்னாவின் ஜெராக்ஸ் ஆக இருக்கிறார். தமன்னாவையும் இவரையும் அருகருகே நிற்க வைத்தால் ஒரிஜினல் தமன்னா யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பம் நேரும். அந்தளவுக்கு உருவ ஒற்றுமை உயரம் நிறம் எல்லாமே பொருந்தி இருக்கிறது. நடிப்பிலும் ஜியா சங்கர் தமன்னாவையே முழுக்க இமிடேட் செய்திருக்கிறார். ஆனால் எல்லாமே சுறுசுறுப்பு விறுவிறுப்பு சேர்ந்த ஒரிஜினல் நடிப்பாக அமைந்திருக்கிறது.

ஜியாவின் காதலர்களாக நடித்திருக்கும் மதும் கேஷ், அர்ஜுன் அசோகன் இருவருமே நடிப்பில் வேறுபாடு காட்டி இருக்கிறார்கள். அர்ஜுன் துடிப்பாக நடிக்கிறார். மதும் கேஷ் புயலுக்கு முன்வரும் அமைதி போல் ரொம்பவும் இறுக்கமாக நடித்திருக்கிறார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர் முடிந்தவரை காமெடி செய்ய பார்த்திருக்கிறார். அதிதியின் தந்தையாக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார்.

படத்தை சன்னி, டென்வி தயாரித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை பழமையும் புதுமையும் கலந்து செவிக்குள் புது வெள்ளமாக பாய்கிறது. ஒன்றிரண்டு பாடல்கள் கேட்டது போலவே இருந்தாலும் தலையசைத்து விரல்களில் தாளம் போட வைக்கிறது.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு கண்ணாடிபோல் பளபளக்கிறது

முக்கோண காதலை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய்.

காதல் ரீசெட் ரிப்பீட் – இசை மழையுடன் ஒரு காதல் கதை.

Review By
K. Jayachandhiran
trending cinemas now . com

Related posts

திறந்தவெளியில் மழையில் வீணாகும் நெல்!

Jai Chandran

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்

Jai Chandran

ETThemeMusic & Background Score are here

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend