Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா (பட விமர்சனம்)

படம்: முஸ்தபா முஸ்தபா

நடிப்பு: சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்ன கோட்லா, மானசா சவுத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி,

தயாரிப்பு: பிரதீப் மகாதேவன்

இசை: எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட்

இயக்கம்: பிரவீன் சரவணன்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா
(D’One), அப்துல் ஏ நாசர்

டிவியில் வேலை செய்யும் சதீஷுக்கும், டாக்டர் மோனிகாவுக்கும் காதல் வளர்கிறது. திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்த நிலையில் சதீஷ் இன்னொரு பெண்ணுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாக அதைக் கண்டு அதிர்ச்சி அடையும் சதீஷ் எப்படியாவது அந்த வீடியோ தன் காதலி கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தகிடுதத்தங்கள் செய்கிறார். சின்ன விஷயத்துக்கு தனது காதலை பிரேக் அப் செய்த காதலி எனது வீடியோவை பார்த்தால் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்று பயந்து நடுங்குகிறார். வீடியோவை அழிக்கும் சாக்கில் நடக்கும் கூத்துகள் தான் கதை.

காமெடி ஹீரோ சதீஷ் மீண்டுமொரு ஒரு காமெடி கதை களத்தில் தோன்றியிருக்கிறார்.
திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் தனது வீடியோ ஒன்று இணையத்தில் வைர்லாகும் என்பது அறிந்து சதீஷ் நடுங்குவதும் பின்னர் அந்த வீடியோ யாரிடம் இருக்கிறது என்பதை தேடி அலைய தொடங்கியதும் காட்சிகள் காமெடி றெக்கை கட்டிக் கொள்ளுகின்றன.

சுரேஷ் ரவி இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார்.. இவரை வைத்து தான் இந்த கதையில் இயக்குனர் சித்து விளையாட்டு காட்டி இருக்கிறார். சதீஷ் மீது கதை கொண்டு செல்லும் இயக்குனர் ஒரு கட்டத்தில் அந்த கதையை சுரேஷ் ரவி மீது மாற்றி கதையையே உல்டா செய்வது எதிர்பார்க்காத திருப்பம். அப்படி இயக்குனர் என்ன உல்ட்டா செய்துவிட்டார் என்று யோசித்து மண்டையை குழப்பி கொள்வதை விட ஒருமுறை படத்தை பார்த்து விட்டால் சிக்கல் தீர்ந்து விடும்.

பிரதீப் மகாதேவன் தயாரித்திருக்கிறார்.
எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட் இசையில் காமெடி நய்யாண்டி செய்கிறது.
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்ன கோட்லா, மானசா சவுத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், கூட்டத்தை வைத்து இயக்குனர் பிரவீன் சரவணன் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.

முஸ்தபா முஸ்தபா – கலாட்டா காதல் கல்யாணம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com

 

 

Related posts

வட சென்னை பின்னணியில் காத்து வாக்குல ஒரு காதல்

Jai Chandran

எட்டர்னல்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

DiaryTeaser

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend