Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தி ஆறு ( பட விமர்சனம் )

படம்: ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தி ஆற

நடிப்பு: சபரி, ரோகிந்த், ரக்ஷிதா, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே ஆர் விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ்,
எஸ்.சினேகா,
குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன்,
சிங்கம் புலி, புஜ்ஜிபாபு,
சாம்ஸ்,
அம்பானி சங்கர்,
முல்லை, கோதண்டம்,
இவர்களுடன் எம்.எஸ்.மூர்த்தி

தயாரிப்பு:, எம் எஸ் மூர்த்தி

ஒளிப்பதிவு : சேவிலோ ராஜா

இசை, எழுத்து இயக்கம்: எம் எஸ் மூர்த்தி

பி ஆர் ஓ : புவன் செல்வராஜ்

ரக்சிதா கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் புது வீடு வாங்கிக் கொண்டு குடியேறுகிறார். எதிர் பிளாக்கில் உள்ள வீட்டில் இருக்கும் ஸ்வேதாவுடன் நட்பு ஏற்படுகிறது அவரைப் பற்றி குடியிருப்பு ஓனரிடம் விசாரிக்கும் போது அந்த வீட்டில் யாரும் இல்லை பூட்டிதான் கிடக்கிறது என்ற தகவல் சொல்ல அதைக் கேட்டு அதிர்கிறார் ரக்ஷிதா எதிர் பிளாக்கில் இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தி ரக்ஷதாவை குறி வைப்பது ஏன் என்ற கேள்விக்கு பரபரப்பு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த கதையாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி அத்துடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

ரக்ஷிதா புது வீட்டுக்கு குடி வந்துவிட்டு எதிர் பிளாட்டில் இருக்கும் சுவேதாவிடம்  தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசும்போதே இது ஏதோ ஒரு அமானுஷ்ய உலகத்தில் கொண்டு போய் கதையை முடிச்சு போடப்போகிறது என்று எண்ணம் தோன்றுகிறது. எதிர்பார்த்தது போலவே அமானுஷ்யம் நிகழ்வதும் இனி அந்த பேய் என்னவெல்லாம் ஆட்டம் ஆட போகிறதோ என்ற திகிலை கிளப்புகிறது.

பேய் காட்டும் பயத்தை விட நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு வைத்த அந்த சூனிய பாட்டி கிளப்பும் பயம் தான் படபடக்க வைக்கிறது. குடும்ப பாங்காக வரும் ரக்ஷிதா ஸ்பாவிற்கு வந்து மசாஜ் செய்ய முயல்வதும் திடீரென்று ரக்ஷிதா உடம்பில் ஆவி புகுந்து அங்கு இருப்பவர்களை அலற விடுவதும் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்ற பரபரப்பை உணர வைக்கிறது.

சபரி, ரோகிந்த் ஹீரோக்களாக நடிக்க, பவன் கிருஷ்ணா, கே ஆர் விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ்,
எஸ்.சினேகா,
குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, பி.எல்.தேனப்பன்,
சிங்கம் புலி, புஜ்ஜிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சேவிலோ ராஜா ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது. எம் எஸ் மூர்த்தி படத்துக்கு இசை அமைத்து திகில் பரபரப்புடன் பெண்களை ஆட வைக்கும் அம்மன் பாட்டையும் இணைத்து கமர்சியல் ரீதியிலிலான படத்தை.
இயக்கியிருக்கிறார்.

99/66 – அடுக்குமாடி அமானுஷ்யம்.

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com

Related posts

Nani’s Hi Nanna Trailer On Nov 24th

Jai Chandran

Nabha Natesh As Parvathi From Nagabandham..

Jai Chandran

நடிகர் உதயா 40 சதம் சம்பளம் குறைப்பு…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend