Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சல்லியர்கள் (பட விமர்சனம்)

படம்: சல்லியர்கள்

நடிப்பு: சேது கருணாஸ், சத்யதேவி , திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சவுந்தரராஜன், மோகன், சந்தோஷ்,

தயாரிப்பு: எஸ் கருணாஸ், பி கரிகாளன்

இசை: கென் மற்றும் ஈஸ்வர்

ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்

இயக்கம்: டி. கிட்டு

பி ஆர் ஓ: A. ஜான்

தமிழ் பிரதேசம் பகுதி மக்களின் உரிமையை ராணுவ அடக்குமுறை கொண்டு பறிக்கிறது சிங்கப்பிரதேசம். உரிமையை நிலைநாட்டவும், மண்ணையும் மக்களையும் காக்க தமிழ் பிரதேச மக்கள் ஆயுத போர் செய்கின்றனர். இந்த போரில் காயம் அடையும் போராளிகளை தமிழ் பிரதேச போராளிகள் பங்கர் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் காக்க உழைக்கின்றனர் . இதையடுத்து சிகிச்சை அளிக்கும் பங்கர்கள் மீது சிங்க ராணுவம் விமான தாக்குதல் நடத்துகிறது. அடுத்து நடப்பது என்ன? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

தமிழ்ப்பிரதேசம் மக்கள் மீது சிங்கப்பிரதேச ராணுவம் தாக்குதல் நடத்திய படம் என்றாலே இது யாருக்கான படம் என்பது புரிந்துவிடும். தணிக்கையின் கத்தரியும், சொல்ல வந்த விஷயத்தை சொல்லவிடாமல் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் இந்த போராளி படம் உருவாகியிருப்பதையும் உணர முடிகிறது.
ஆயுதம் ஏந்திய போராளிகள் மட்டுமல்லாமல் உயிர் காக்கும் கத்தி ஏந்திய டாக்டர்களும் போர்க்களத்தில் எப்படி மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடினார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக படம் மட்டுமல்ல நடித்திருக்கும் நட்சத்திரங்களும் ரத்தம் கொப்பளிக்க உணர்த்தியிருக்கிறார்கள்.

டாக்டர் நந்தினியாக நடித்திருக்கும் சத்யதேவி பெண் போராளியாகவே மாறியிருக்கிறார். இவர் நிஜ டாக்டரா என்று எண்ணும் அளவுக்கு அடிபட்டு வரும் போராளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையின் போது காட்டும் வேகம்,
நேர்த்தி, கத்தி போன்ற பேச்சு இப்படித்தான் ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்.

டாக்டர் செம்பினாக நடித்திருக்கும் மகேந்திரனும் டாக்டர் நந்தினிக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.

மாறனாக நடித்திருக்கும் நாகராஜ், மலராக நடித்திருக்கும் பிரியலயா காதல் ஜோடி காதலை மட்டுமல்லாமல் அத்துடன் சேர்ந்து வீரத்தையும் காட்டுவது இதுவரை காதல் காட்சிகளில் பார்க்காத புதுமை.

“நீ மண்ணுக்காக மக்களுக்காக போராட்டுவதால் பேரழகன்” என்று சொல்லும் பிரியலயா, “நானும் அதுபோன்று பேரழகி ஆவேன்” என்று சொல்லும்போது பேரழகன், பேரழகி வார்த்தைகளுக்கு ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது . சாதாரண வார்த்தைகளுக்கும் கம்பீரம் தரும் வசனங்கள் எழுதி படத்தை இயக்கிய டி.கிட்டு இதை சினிமாவாக அல்ல சல்லியர்களின் வீரவரலாறாக தந்திருக்கிறார்.
சரி, சல்லியர்கள் யார் என்கிறீர்களா? போராளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்தான் சல்லியர்கள்.
கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

எஸ் கருணாஸ், பி கரிகாளன் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கென் மற்றும் ஈஸ்வர் இசை அமைத்திருக்கிறார்கள்.

சிபி சதாசிவம் கேமிரா வெட்டவெளி வனாந்தரங்களில் எதார்த்தமான பதிவுகள் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

சல்லியர்கள் – மண்ணுக்கும் மக்களுக்குமான போராளிகள்.

Review By
K Jayachandhiran
www.trendinng cinemas now.com

Related posts

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் நாளை நடக்கிறது – வாழ்க்கை வரலாறு

Jai Chandran

ஏ.ஆர்.ரஹமானின் மூப்பிலா தமிழ் தாயே பாடல் ஆல்பம் வெளியீடு

Jai Chandran

அமீரா தஸ்தூர் நடிப்பை, பாராட்டிய பிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend