Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கொம்பு சீவி (பட விமர்சனம்)

படம்: கொம்பு சீவி

நடிப்பு: சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா

தயாரிப்பு :முகேஷ்.T.செல்லையா

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு:
பால சுப்பிரமணியம்

இயக்கம்: பொன் ராம்

பிஆர்ஓ: நிகில் முருகன்

வைகை அணை கட்டும்போது அங்கிருந்த பல கிராமங்கள் அழிந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். நிலம்  மற்றும் உடமைகளை இழந்த அப்பகுதி மக்கள் அணையில் நீர் வற்றினால் விவசாயம் செய்து பிழைக்கிறார்கள், நீர் நிரம்பினால் கஞ்சா போன்ற போதை வஸ்து தயாரித்து விற்று அதில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஊர் மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களைக் காப்பாற்றும் இடத்தில் ரொக்க புலி (சரத்குமார்) இருக்கிறார். தாய் இறந்ததால் உறவுகளால் கைவிடப்பட்ட பாண்டியனை (சண்முக பாண்டியன்) தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார் ரொக்கப் புலி. மாமன் மச்சானாக இருவரும் பழகுகின்றனர். கஞ்சா கடத்தும் இவர்கள் அடிக்கடி போலீசில் சிக்குகின்றனர். ஒரு கட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரி இவர்கள் இருவர் மீதும் வஞ்சம் வைக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

இயக்குனர் பொன்ராம் படமென்றாலே காமெடியும் காதலும் இருக்கும்  இதில் கூடுதலாக ஆக்சனையும் சேர்த்து மாறுபட்ட கதைக் களத்தை உருவாக்கி இருக்கிறார்.
சரத்குமாரையும், சண்முக பாண்டியன் விஜயகாந்தையும் முதன்முறையாக இப்படம் மூலம் இணைத்து கதைக்கு ஒன்றுக்கு இரண்டு பங்கு வலு சேர்த்திருக்கிறார்.

ரொக்க புலி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் வழக்கமான தனது தோரணைகளை விட்டுவிட்டு நையாண்டி கலந்து வித்தியாசமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். தொடக்க காட்சியில் புல்லட்டில் அமர்ந்து வரும் தோரணை, அதிரடி ஆக்சன் காட்டுவது என அசத்திவிட்டார்.
சண்முக பாண்டியன் இளம் ஹீரோவாக இருந்தாலும் சீனியர் என்ற வகையில் சரத்குமாருக்கு தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. சண்முக பாண்டியனும் சரத்குமாருக்கு எவ்வளவு மரியாதை முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை உணர்ந்து காட்சிகளிலும் அதை வெளிப்படுத்தி நெகிழ வைக்கிறார்.

நல்ல நேரம் பார்க்கும்போது ரேவதி நட்சத்திரம் தெரிகிறதா? ரோகினி நட்சத்திரம் தெரிகிறதா என்று முனிஷ்காந்த் வானத்தை பார்க்கும் போது அங்கிருக்கும் சரத்குமார் வானத்தைப் பார்த்து ராதிகா நட்சத்திரம் தெரிகிறதா என்று அடிக்கும் காமெடி பஞ்ச் அரங்கை குபீர் சிரிப்பில் ஆழ்த்துகிறது.

சண்முக பாண்டியனக்கு ஆக்ஷனையும் காதலையும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய மாறுபட்ட கதாபாத்திரம் என்றாலும் அதை வேறு நடிகர் சாயல் எதுவும் இல்லாமல் தனது பாணியில் வெளிப்படுத்தி நடித்திருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை வேட்டி கட்டி நடித்திருக்கும் இந்த மதுரை இளம் சிங்கம் தமிழ் ரசிகர்கள் மனதை தன் பக்கம் இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக்சன் காட்சிகளிலும் ஆவேசமாக பேசும் காட்சிகளிலும் சண்முக பாண்டியன் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளியிட்டிருக்கிறார். இவரிடம் அடுத்தடுத்து வரும் படங்களில் இன்னும் நிறைய ஆக்க்ஷன் அதிரடிகளை எதிர்பார்க்கலாம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் தாரணிகா, சண்முக பாண்டியனை மிரட்டுவதுபோல் மிரட்டி அவரிடம் காதல் வலையில் விழுவது அழகு.

முனிஷ்காந்த், கல்கி ராஜா காமெடி டிராக்கும் எடுபடுகிறது.

முகேஷ்.T.செல்லையா படத்தை தயாரித்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கொடி கட்டி இருக்கிறது.

பால சுப்பிரமணியம் கேமரா காட்சிகளை மிகையில்லாமல் எதார்த்தமாக படமாக்கி இருக்கிறது.

வைகை அணை கட்டப்பட்ட பின்னணியை மையமாக வைத்து கதையை அமைத்திருக்கும் இயக்குனர் பொன் ராம் சோக வடுக்களை கமர்சியல் கதையாக மாற்றி காமெடி, ஆக்சன், காதல், சென்டிமென்ட் கலந்து ஃபுல் பேக்கேஜ் படமாக தந்திருக்கிறார்.

கொம்பு சீவி – குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் அருமையான கமர்சியல் படம் .

Review By
K Jayachandhiran

trending cinemas now.com

 

Related posts

ஹனு-மேன் ஒரு சர்வதேச திரைப்படம்: இயக்குநர் பிரசாந்த் வர்மா

Jai Chandran

Arun Vijay shares son Arnav Vijay’s fun experience

Jai Chandran

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend