Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஐ பி எல் (பட விமர்சனம்)

படம்: ஐ பி எல்

நடிப்பு: கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா, நரேன், திலீபன் ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்க புலி

தயாரிப்பு: ஜி ஆர் மதன் கிருஷ்ணன்

இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி

ஒளிப்பதிவு: எஸ் பிச்சுமணி

இயக்கம்: கருணாநிதி

பிஆர்ஓ: நிகில் முருகன்

கிஷோர் வாடகை கார் ஓட்டுனராக இருக்கிறார் பின்னர் ஏற்படும் பிரச்சனையால் சொந்த வண்டி வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒரு சமயம் அவர் வண்டியில் செல்லும் போது குறுக்கே டிடிஎஃப் வாசன் டூவீலரில் வந்து இடித்துவிடுகிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது வேறு ஒரு நபரின் டூ வீலர் கிஷோர் காலில் மோதி விட அவரது காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதற்கிடையில் ஒரு வீடியோ விவகாரமாக கிஷோர் மீது பழி போட்டு போலீஸ் கைது செய்து அவரை சித்தரவதை செய்கிறது. அப்போதுதான் கிஷோர் தனது காதலியின் அண்ணன் என்பது டிடிஎஃப் வாசனுக்கு தெரிகிறது. அவர் கிஷோரை காப்பாற்ற முயல்கிறார் அதன்பிறகு நடப்பது என்ன என்பதை அரசியல் பரபரப்புடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

சென்ற ஆட்சியின் போது நடந்த சில உண்மைச் சம்பவங்களை தொகுத்து அதை திரைக்கு ஏற்றபடி கதையாக சித்தரித்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் கருணாநிதி.

அடிக்கடி யூட்யூபில் வேகமாக பைக் ஓட்டி சாகசங்கள் செய்யும் டிடிஎஃப் வாசன் இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இவருக்கு youtube பாலோயர்ஸ் இருக்கிறார்கள். அது இவருக்கு ஒருவகையில் பிளஸ் ஆக இருந்தாலும் இவர் செய்யும் சாகசங்கள் அடிக்கடி இவரை போலீஸ் நிலையத்தில் நிஜத்தில் கொண்டு போய் நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.

டூவீலர் சாகச வீரரான டிடிஎப் வாசன் இந்த படத்தில் உணவு டெலிவரிபாயாக அறிமுகமாகி இருக்கிறார். அவ்வப்போது சில மெசேஜ்களை சொல்லி தனது ரசிகர்களை குஷிபடுத்த முயல்கிறார்.
சண்டைக் காட்சிகளில் ஓரளவுக்கு ஈடு கொடுத்து நடித்திருந் தாலும், நடிக்க வேண்டிய காட்சிகளில் அவ்வளவாக சோபிக் காத நிலையில் அடுத்தடுத்த படங்களில் இப்படத்தில் எடுத்த பயிற்சி பலன் அளிக்கலாம்.

கிஷோர் டாக்ஸி டிரைவராக வந்தாலும் கால் எலும்பு முறிவுக்கு பிறகு ஊன்று கோலுடன் அவர் தாங்கி தாங்கி நடந்து பரிதாபத்தை அள்ள முயல்கிறார் ஆனால் அவர் போலீஸ் நிலையத்தில் சதி காரணமாக சிக்க வைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிப்பது உண்மையிலேயே பரிதாபத்தை வரவழைக்கிறது. இந்த காட்சிகள் “விசாரணை” படத்தில் காட்டப்பட்ட போலீஸ் சித்திரவதை காட்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

முதல்வர் தனக்கு தேவையான ஆவணங்களை பண்ண வீட்டில் ஆட்களை அனுப்பி தேடுவது, அங்கு நடக்கும் கொலைகள் போன்ற சம்பவங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்திகளாக பார்த்த ஞாபகம் இருக்கிறது.

அபிராமி, போஸ் வெங்கட், நரேன், குஷிதா தங்களது கதாபாத்திரங்களை இயக்குனர் சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஹரிஷ் பெராடி கொடூர வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.

ஜி ஆர் மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தி பின்னணி இசை ஓரளவுக்கு கை கொடுக்கிறது.
எஸ் பிச்சுமணி ஒளிப்பதிவு ஓகே ரகம்.

அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் கருணாநிதி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் பாதி உண்மைகளை சொல்ல முடிந்திருக்கிறது, மீதி உண்மைகளை சொல்வதற்கு தயக்கம் காட்டி இருப்பதும் தெரிகிறது. போலீஸ் சித்திரவதை காட்சிகளை கொஞ்சம் குறைத்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன இறுக்கம் குறையும்.

ஐ பி எல் – அரசியல் தோலுரிப்பு.

Related posts

AGS Cinemas makes great quality cinema experience affordable : Thane Ticket Rs. 100

Jai Chandran

Victory Venkatesh New Movie Venky 75

Jai Chandran

அருண் விஜய் AV 31 திரைப்பட டப்பிங் பணிகள் துவக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend