Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தேரே இஷ்க் மைய்ன் (இந்தி பட விமர்சனம்)

படம்: தேரே இஷ்க் மைய்ன்

நடிப்பு: தனுஷ், கிருத்தி
சனூன், பிரியென்ஷு பெயின்யூலிபm, பிரகாஷ்ராஜ், புஷ்பராக் ராய் சவுத்ரி, பரம்வீர் சிங் சீமா

தயாரிப்பு: பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ஆனந்த் எல் ராய், ஹிமான் ஷு வர்மா

இசை: ஏ ஆர் ரகுமான்

ஒளிப்பதிவு: துஷார் காந்தி ராய்

இயக்கம்: ஆனந்த் எல் ராய்

பி ஆர் ஓ: ரியாஸ் அஹமத், பாரஸ் ரியாஸ்

கதை: நண்பர்களுடன் சேர்ந்து அடாவடித்தனம் செய்யும் சங்கர் (தனுஷ்) யாருக்கும் கட்டுப்படாமல் இஷ்டம் போல் நடக்கிறார். அவரை முக்தி (கிருத்தி கிருத்தி சனுன்) சந்தித்து “உன்னை நான் நல்லவனாக மாற்றுகிறேன். அதை வைத்து நான் டாக்டர் பட்டம் பெறுவேன் அதற்கு உதவ வேண்டும்” என்று கேட்கிறார். ” நீ” எனக்கு கேர்ள் பிரண்டாக இருந்தால் அதற்கு சம்மதிக்கிறேன்” என்கிறான் சங்கர். ” எந்த நேரத்திலும் உன்னை நான் காதலிக்க மாட்டேன் கேர்ள் ஃபிரண்ட் ஆக மட்டுமே இருப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்து சங்கரை சம்மதிக்க வைக்கிறாள் முக்தி. வருட கணக்கில் இவர்கள் சந்திப்பு நடக்கும் நிலையில் சங்கருக்கு முக்தி மீது தீராத காதல் ஏற்படுகிறது. ஆனால் சங்கர் மீது முக்திக்கு காதல் எதுவும் இல்லை. ஒரு கட்டத்தில் தன் காதலை முக்தியிடம் சங்கர் சொல்ல அதற்கு அவள் நிபந்தனை விதிக்கிறாள். அந்த நிபந்தனையை சங்கர் பூர்த்தி செய்தானா? இவர்களின் காதல் எங்கு போய் முடிகிறது என்பதற்கு உருக்கமான பதிலை அளிக்கிறது கிளைமாக்ஸ்.

காதல் படங்கள் சமீப காலமாக தமிழிலும் சரி, இந்திலும் சரி குறைந்துவிட்டது. ஆக்சன் கதைகள்தான் சரமாரியாக வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் மனம் உருக்கும் ஒரு காதல் கதையை தனுஷால் தர முடியும் என்று கிஞ்சித்தும் நம்ப முடியவில்லை ஆனால் அதை சாதித்து காட்டியிருக்கிறார்.

கெட்டவனாக சுற்றும் தனுஷை அழைத்து பேசும் கிருத்தி, “உன்னை நல்லவனாக மாற்றுகிறேன்” என்று சொல்வதும் பதிலுக்கு ” நான் உன்னை காதலிப்பேன்” என்று தனுஷ் சொல்வதும், ” நீ காதல் செய் ஆனால் நான் காதலிக்க மாட்டேன் ” என்று கிருத்தி சொல்வதுமாக வரும் காட்சியில்,  படம் முழுக்கவே இதுதான் கருவாக இருக்கப்போகிறது என்று யோசிக்க முடிய வில்லை. இந்த லைன்தான் வழக்கமான காதல் கதையாக இல்லாமல் இப்படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

தனுஷும், கிருத்தியும் தங்களது பாத்திரங்களை நிஜமாக்க எவ்வளவு பிடிவாதமாகவும், போட்டியுடனும் நடித்திருக்கிறார்கள் என்றால் இருவரது நடிப்புக்குமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரலாம்.

படம் முழுக்க டெல்லியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலும் கொஞ்சமும் அரசியல் நெடி கலக்காதது அதிசயம். இதற்கான கிரெடிட் முழுவதும் இயக்குனர் ஆனந்த எல் ராய்க்குத்தான் சேரும்.

படத்துக்கு இன்னொரு பலம் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் அதிக நேரம் ஓடும் நீண்ட படமாக இருந்தாலும் பொறுமை இழக்க செய்யாமல் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறது.

தேரே இஷ்க் மைய்ன் – காவிய காதல்..

Review By

K Jayachandhiran

trendingcinemasnow.com

Related posts

சிம்புவின் ’மாநாடு’ படப்பிடிப்பில் சித்த மருத்துவர் வீரபாபு..

Jai Chandran

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடல்

Jai Chandran

ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு முதல்வர் ஸ்டாலின், எம் எல் ஏ உதயநிதிக்கு நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend