Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இரவின் விழிகள் (பட விமர்சனம்)

படம்: இரவின் விழிகள்

நடிப்பு: மகேந்திரா, கர்ணா, நீமா ராய், ரேஷ்மா, நிழல்கள் ரவி, ரகுபதி, சிக்கல் ராஜேஷ், கருப்பு, சிசர் மனோகர், மாரிமுத்து, சரண் ராஜ், ரங்கராஜ், ஏன்சி சிந்து, கயல், அமிதா

தயாரிப்பு: பி.மகேந்திரன்

இசை: ஏ எம் அசார்

ஒளிப்பதிவு: எல் கே ஆண்டனி

இயக்கம்: சிக்கல் ராஜேஷ்
:
பி ஆர் ஓ: A. ஜான்

சமூக ஊடகம் குறிப்பாக யூ ட்யூப் மோகத்தில் நடக்கும் குற்றங்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது இரவின் விழிகள்.

மகேந்திரா, நீமா ராய் ஜோடி யூ டியூபில் பிரபலம் ஆவதற்கு சில அடாவடி வேலைகள் செய்கின்றனர். ஒரு அசைன்மெண்டுக்காக காட்டுப் பகுதிக்கு செல்லும்போது அங்கு முகமூடி அணிந்த.ஒருவனால் கொலை முயற்சிக்குள்ளாகின்றனர். அங்கிருந்து தப்பி வரும் அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து முகமூடி மனிதனை தேடி செல்கின்றனர். ஏற்கனவே
முகமூடி மனிதனால் சில கொலைகள் நடந்திருக்கின்றன. மீண்டும் காட்டுக்குள் சென்ற இவர்களால் உயிருடன் தப்ப முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்றாலே அதை இங்கு ஓபன் செய்வது சுவாரசியத்தை குறைத்துவிடும் என்பதால் மேலோட்டமாக இந்த படத்தை அணுகுவதுதான் சரி.

ஹீரோவாக நடித்திருக்கும் மகேந்திரா படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது ஜோடி நீமா ராய். இருவரும் சேர்ந்து யூடியூப் கன்டன்டுக்காக ரிஸ்க் எடுத்து செய்யும் வீடியோக்கள் அவர்களை விபரீதத்தில் கொண்டு போய் விடுவது சில உண்மைச் சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறது.

காட்டுக்குள் முகமூடி போட்டுக் கொண்டு கொலையாளியாக சுற்றி வரும் சிக்கல் ராஜேஷ் கிளைமாக்சில் கையில் வெட்டுக்கத்தி வைத்திருந்தாலும் அதை வைத்து எதிரில் நிற்கும் யூடியூபர்களை ஒரு வெட்டு கூட வெட்டாடாமல் நீண்ட வசனம் பேசி காட்சியின் வேகத்தை குறைத்து விடுகிறார்.

சிக்கல் ராஜேஷ் முகமூடி கொலைகாரனாக மாறுவதற்கு என்ன காரணம் என்ற சென்டிமென்ட் ஓரளவுக்கு ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

நீமா ராய் கிளாமர் உடை அணிந்து கிக் ஏற்றுகிறார். முகமூடி கொலைகாரனிடம் துணிச்சலாக அவர் சண்டை போடுவது விறுவிறு.

சமூக ஊடகங்கள் சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்கிறது? என்ன தீமை விளைவிக்கிறது? என்பதை வெட்ட வெளிச்சமாக சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்கி யிருக்கிறார் . கிளைமாக்சில்  திடீரென்று காந்தாரா போல் உருவம் தோன்றி சிக்கல் ராஜேஷ் அருகே அமர்ந்து சத்தமிட்டு மறைவது ஷாக். எதற்காக இந்த காட்சி என்பதுதான் புரியவில்லை.

ஏ எம் அசார் இசையில் கருப்பன் பாடல் ஆக்ரோஷமாக ஒலிக்கிறது.

இரவின் விழிகள் – வில்லகமான யூடியூபர்களுக்கு எச்சரிக்கை மணி.

 

Review By

K Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ பட முன்னோட்டம் வெளியீடு 

Jai Chandran

கமல் விடுத்த கோரிக்கை துணை முதல்வர் உதயநிதி பதில்

Jai Chandran

கேன்ஸ் பட விழா சென்ற செங்கொடி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend