Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஆரவ் பட தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்..

பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நடிகர் ஆரவ் தற்போது பட தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார் .

பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது குறித்து நடிகர் ஆரவ் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும்  ஊக்கத்தையும்  வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.  விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன்,  இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

கடவுளின்  அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்.

அன்பும் நன்றியுமுடன்,..

இவ்வாறு ஆரவ் கூறியுள்ளார்

Related posts

ட்ரீம். வாரியர்ஸ் ‘அஞ்சாமை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Jai Chandran

‘Kabzaa’ Movie Teaser Released by Rana Daggubati

Jai Chandran

Director’s Ezhil’s “YUTHA SATHAM” MOVIE PRE-RELEASE EVENT

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend