Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வில் (உயில்) பட விமர்சனம்

படம்: வில் (உயில்)

நடிப்பு: சோனியா அகர்வால், விக்ராந்த், அலீக்யா, பதம் வேணுகுமார், மோகன் ராமன், சுவாமிநாதன்,

தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப் ப்ரொடக்ஷன், கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல்

இசை: சௌரப் அகர்வால்

ஒளிப்பதிவு: டி. எஸ். பிரசன்னா

இயக்கம்: எஸ் சிவராமன்

பி ஆர் ஓ: பரணி அழகிரி

சோனியா அகர்வால் நீதிபதியாக இருக்கும் கோர்ட்டுக்கு ஒரு வழக்கு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கும் வீடு தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோரி ஒரு பெண் வழக்கு தொடுக்கிறார். இதில் நீதிபதிக்கு சந்தேகம் எழ அவர் ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து உண்மையை கண்டறிய சொல்கிறார். விசாரணை அதிகாரியான விக்ராந்த் உண்மையை கண்டறிந்தாரா? வழக்கு தொடுத்த பெண்தான் உரிமை தாரரா? என்பதை விக்ராந்த் உறுதி செய்தாரா என்பதற்கு சட்ட நுணுக்கங்களுடன் பதில் அளிக்கிறது வில் திரைப்படம்.

சோனியா அகர்வால் ஹீரோயின் என்ற அந்தஸ்திலிருந்து மாறிய பிறகு குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வில் படத்தில் ஐகோர்ட் நீதிபதியாக வேடமேற்று நிதானமான அதேசமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய நடிப்பை வழங்கியிருக்கிறார்.

விசாரணை அதிகாரியாக வரும் விக்ராந்த் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தாலும் அவருக்கான ஒரு இடத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.
உயிலில் எழுதப்பட்ட உண்மை வாரிசு யார் என்பதை கண்டறிவதற்கு அவர் மேற்கொள்ளும் முயற்சி அதில் வரும் ஆபத்துகளை எதிர்கொள்வது என பாதி ஆக்சன் ஹீரோவாக செயல்பட்டிருக்கிறார் விக்ராந்த்.

சொத்துக்கு சொந்தக்காரராக வரும் பதம் வேணு குமார் ஒரு ஜல்சா பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஃபுட் ஸ்டெப் ப்ரொடக்ஷன், கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

சௌரப் அகர்வால் இசை அமைப்பாளராக அறிமுகமாகியிருந்தாலும் காட்சிக்கு ஏற்ப இசையமைத்து தன்னால் ஒரு படத்துக்கு இசையமைக்க முடியும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
சௌரப் அகர்வால் நடிகை சோனியா அகர்வாலின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் டி எஸ் பிரசன்னா காட்சிகள் ஓகே ரகம்.

உயில் தொடர்பான சட்ட நுணுக்கமான உண்மை கதையை பின்னணியாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் எஸ் .சிவராமன். ஒரு வழக்கை திரைப்படமாக சுவாரசியமாக சொல்வது கடினமான விஷயம் தான். படத்தின் முதல் பாதியில் காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் குறைந்து விடுவதால் சோர்வும் தொய்வும் ஏற்படுகிறது.

வில் – உயில் பற்றிய சட்ட போராட்டம்.

Review By
K.Jayachandhiran
trendingcinemasnow.com (website)

Related posts

Ram Gopal Varma’s directorial “Ponnu” Experience

Jai Chandran

தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன் – நடிகை வர்ஷினி..

Jai Chandran

குடும்பஸ்தன் வெற்றி விழாவில் மணிகண்டன் – சான்வே பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend