Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஹெய் வெசோ” படம் பிரமாண்ட தொடக்கம்

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின்

Related posts

ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : 6ம் தொகுதி ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி

Jai Chandran

இந்தியாவில் கொரோனா சமூக பரிமாற்றமாக மாறவில்லை..

Jai Chandran

The Hunt: The Rajiv Gandhi Assassination Case comes alive

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend