இந்தியன் கில்லி, ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஏ எம் ரத்தினம் தயாரித்த படம் குஷி.
நடிகர் விஜய், ஜோதிகா, விஜயகுமார், மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவா இசையமைத்திருந்தார். எஸ் ஜே சூர்யா படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2000 ஆண்டு இப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.
சமீப காலமாக ஏற்கனவே வெற்றி பெற்ற பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் ஒரு ட்ரெண்ட் திரை உலகில் நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் “கில்லி” படம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு பெரும் வசூல் குவித்தது. அதேபோல் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த “கேப்டன் பிரபாகரன்” படம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அந்த படமும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடித்திருக்கும் “குஷி” படம் திரைக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் படத்தை வெளியிடுகிறார்.
இதையொட்டி பத்திரிக்கை மீடியா சந்திப்பை படக் குழுவினர் நடத்தினார்கள். இதில் பட தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம், இயக்குனர் எஸ் ஜே சூர்யா, விநியோகஸ்தர் சக்திவேலன், பட அதிபர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் பேசியதாவது:
குஷி படம் உருவான விதம் பற்றி கூறினால் அதுவே ருசிகரமாக இருக்கும். எஸ் ஜே சூர்யா அஜித் நடித்த வாலி படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தை பார்க்கும்படி அப்போது என்னிடம் கூறினார்கள். அதை பார்த்த பிறகு படம் நன்றாக இருந்தது. இதையடுத்து இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று கூறினேன். அதன் பிறகு அவர் என்னை சந்தித்தார். என்னிடம் ஒரு கதை கூறினார். பின்னர் அந்த கதையை நடிகர் விஜய்யிடம் நேரில் சென்று கூறியபோது அவருக்கு பிடித்திருந்தது. இந்த படம் ஒரு காதல் கதை. சண்டை காட்சி கிடையாது. ஆனால் விஜய் ஒரு ஆக்சன் ஹீரோவாக இருந்தார். இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று எண்ணிருந்த நிலையில் கதை பிடிக்கவே அவர் நடிக்க கொண்டார்.
அதன் பிறகு மற்ற டெக்னீசியன்கள் உறுதியாகி படம் வெளியானது. படம் ரிலீஸ் தினத்தன்று விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் பெரிய பெரிய ஸ்டார்களை கட்டினார்கள். அதை பார்த்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. விஜய்யிடம் ஆக்சன் காட்சியை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ என்ற பயம் தான் அது. பின்னர் படம் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போதே அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்று இயக்குனரிடம் கூறினேன்.
தற்போது எனக்குள்ள எண்ணம் என்னவென்றால் குஷி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பதுதான். அந்தப் படத்தை எஸ் ஜே சூர்யாவே இயக்க வேண்டும். அதேபோல் கில்லி, ரன் என நான் தயாரித்த எல்லா படங்களின் இரண்டாம் பாகமும் எடுக்க முடிவு செய்திருக்கிறேன். அடுத்தடுத்து அந்த பணிகள் தொடரும்.
விஜயின் கில்லி படம் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்புபெற்றது. அந்த வரிசையில் அதைவிட பெரிய வரவேற்பை குஷி படம் பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஏ. எம்.ரத்தினம் கூறினார்.

விநியோகஸ்தர்.சக்திவேலன் கூறியது: விஜய் நடித்த ககில்லிபடத்தை நான் ரீ ரிலீஸ் செய்தேன். ரீ ரிலீஸ் செய்த படங்களில் இந்தியாவிலேயே வசூல் சாதனை அதிகம் பெற்ற படமாக கில்லி அமைந்தது . தற்போது விஜய் நடித்திருக்கும் குஷி படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் காட்சிகளுக்கு பத்திரிக்கை மீடியாக்கள் தந்த ஆரவாரமான வரவேற்பை பார்க்கும்போதே குஷி தியேட்டரில் ரசிகர்களிடம் எவ்வளவு பெரிய வரவேற்பை பெறப்போகிறது என்பதை உணர முடிகிறது. இந்த படம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினதற்கு பல கோடிகளை சம்பாதித்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
குஷி படம் உருவானது பற்றிய நினைவுகள் என்னால் மறக்க முடியாது. இந்த படத்தின் கதையை அந்த காலகட்டத்தில் விஜய்யிடம் நானும் , தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இருவரும் நேரில் சென்றுதான் கூறினோம். விஜய் m, நான் சொன்ன கதையை கேட்டுவிட்டு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்தார். அவருக்கு கதை பிடித்ததா இல்லையா என்பது கூட என்னால் யூகிக்க முடியவில்லை. கதை பிடிக்கிறதா இல்லையா வேறு கதை கூறட்டுமா என்று அவரிடம் கேட்டபோது, சிஏன் நன்றாக தானே இருக்கிறது நான் செய்கிறேன்சி என்று மிகவும் மென்மையாக கூறினார். இப்படியெ ல்லாம் கூறினால் எனக்கு எப்படி உற்சாகம் வரும், கதை பிடித்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறினால் எனக்கு இன்னும் உத்வேகம் பிறக்கும் என்று கூறினேன்.
திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்தது. இப்படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். படம் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றதுடன் பாடல்களும் இன்று வரைக்கும் பேசும் அளவுக்கு ஹிட்டாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் அந்த காலத்தில்
ஹிட்டான செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலின் அடிப்படையில் போடப்பட்ட மெட்டு. அதேபோல் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற பாடல் அடிப்படையில் மொட்டு ஒன்று.. பாடல் மெட்டில் அமைக்கப்பட்டது.
குஷி பட ரீ ரிலீஸ் ட்ரைலர் மற்றும் பாடல் பத்திரிக்கை மீடியாக்களை கவர்ந்தது போல் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும்.
