Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மதராசி பட விமர்சனம்

படம்: மதராசி

நடிப்பு: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால்,  பிஜு மேனன், சபீர் கல்லர்கால், விக்ராந்த்

தயாரிப்பு: ஸ்ரீ லட்சுமி மூவிஸ்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: சுதீப் எலமான்

இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்து அமைதியை குலைக்க ஒரு பெரிய கூட்டம் திட்டமிடுகிறது. இதற்காக ட்ரக்குகளில் கைத்துப்பாக்கிகளை கடத்தி வருகிறது. இந்த தகவலை அறிந்த என் ஐ ஏ  அதிகாரிகள் துப்பாக்கிகள் அடங்கிய டேங்கரை தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்க அதை வழிமறித்து தாக்குதல் நடத்துகிறார்கள்.  ஆனாலும் எதிர் தாக்குதல் நடத்தும் ரவுடிகள்  அந்த ட்ரக்குகளை நகருக்குள் கொண்டுவந்து பதுக்கி விடுகிறார்கள். இதற்கிடையில் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட  வாலிபன் ரகு (சிவகார்த்திகேயன்) காதல் தோல்வி காரணமாக சாவதற்கு முடிவு செய்கிறான். இந்நிலையில் அவனுக்கு என் ஐ ஏ அதிகாரி தொடர்பு ஏற்படுகிறது. ட்ரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி ஆயுதங்கள் அடங்கிய ஒரு  குடோனை தற்கொலைப்படை அனுப்பி தகர்க்க என் ஐ ஏ அதிகாரி திட்டமிடுகிறார். ஏற்கனவே பாதுகாப்பு படையினர் பலர் உயிர் இழந்த நிலையில் மற்றொரு வீரரை இழக்க விரும்பாத என் ஐ ஏ அதிகாரி தற்கொலைக்கு தயாராக இருக்கும் ரகுவை ஆயுதங்களை அழிக்கும் இடத்துக்கு அனுப்ப முடிவு செய்கிறார். ரகுவும் இதற்கு ஒப்புக் கொள்கிறான். இந்த நிலையில்  தன் காதலி  காத்திருக்கும் தகவல் தெரிய வருகிறது. இதையடுத்து ரகு எடுத்த முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

அமரன் மாபெரும் வெற்றி படத்தை அளித்த சிவகார்த்திகேயன் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடையே இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல வெற்றி படங்களை வழங்கிய  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி படத்தில் நடித்து எதிர்பார்ப்புகளை ஈடு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன

காதல் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மாடியின் உச்சியில் நிற்கும்  சிவகார்த்திகேயனை யாரும் காப்பாற்ற செல்லாமல் வீடியோ எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அவரை கீழே குதிக்கச் சொல்லி கோஷம் போடுவது தற்போதைய இளவட்டங்களின் செல்போன் மோகம், லைக்ஸ் மோகம் போன்றவற்றை இயக்குனர் தோலுரித்திருக்கிறார்.

சாதாரண ஒரு இளைஞன் சிவகார்த்திகேயன் எப்படி என் ஐ ஏ அதிகாரிகளுக்கு உதவுவார். அதை எப்படி அரசு அனுமதிக்கும் என்ற கேள்வி எல்லாம் எழுந்தாலும்  அதற்கு லாஜிக் உடன் பதில் அளித்திருக்கிறார் இயக்குனர்.

கமாண்டோ படைகளே நெருங்க முடியாமல் இருக்கும் வில்லன் வித்யூத் ஜாம்வாலை சிவகார்த்திகேயன் மடக்கிப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பது சஸ்பென்சுடன் கூடிய ஒரு ஆக்சன் காட்சி.

ஆக்சன் காட்சிகள் ஒவ்வொன்றும் ரெக்கை கட்டி பறக்கிறது. சார் பட்டா பரம்பரை  படத்தில் நடித்த டான்சிங் ரோஸ்  சபீர் இப்படத்தில் தன்னுடைய ஆக்சன் களத்தை மிஷின் கன் முழங்க  அதிர்வேட்டாக வெடிக்க செய்கிறார்.

எப்பொழுதுமே ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி என்பது அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் அதே முக்கியத்துவத்தை இந்த படத்துக்கு அவர் தந்திருக்கிறார்

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத்  ஜாம் வால்  இப்படத்தில் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார்.  பாதுகாப்பு படை அலுவலகத்தில் இருந்து தப்பி வரும் வித் யூத் ஜாம்வால் தன்னை சுட வரும் கமாண்டோ படையினரை அநாயி யாசமாக  தூக்கி அடித்து நடித்திருக்கும் ஸ்டைலான அந்த சண்டைக் காட்சியை யூ ட்யூபில் வீடியோ போட்டால் லட்சக் கணக்கில் வியூஸ் பிச்சுக்கும்.

வித்யூத் உடன் சிவகார்த்திகேயன் துப்பாக்கியுடன் மோதி சலிப்பை ஏற்படுத்துவாரோ என்றிருந்த சந்தேகத்தை உடனடியாக நீக்கி  சிவகார்த்தி – வித்யூத் மோதும் அந்த  அதிரடி கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்துக்கு இந்த  ஃபைட் ஒரு பெரிய ஹைலைட்..

சிவகார்த்திகேயன், ருக்மணி காதல் ஜோடிகளாக வந்தாலும் படம் முழுவதும் அந்த காதல், ஆக்சனுக்கு மட்டுமே பயன்பட்டிரு ப்பது வித்தியாசமான அணுகுமுறை.

என் ஐ ஏ  அதிகாரியாக வரும் பிஜு மேனன் எந்த நேரத்திலும் வில்லனாக மாறக்கூடும் என்ற ஒரு படபடப்பு அந்த கதாபாத்திரத்தை கடைசிவரை உயிர்ப் போடு வைத்திருக்கிறது. பிஜு மேனன்  மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் டான்சிங் ரோஸுடன் போடும் ஆக்ஷன் காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார்.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ்  நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில்  படத்தை தயாரித்திருக்கிறது .

அனிருத் இசை காட்சிகளுக்கு மேலும் விறுவிறுப்பு கூட்டி இருக்கிறது

சுதீப் எலமான் ஒளிப்பதிவு பான் இந்தியா பட பாணியில் ஆக்சன் டென்ஷனுடன்  காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது.

எதிர்காலத்தில் இப்படியொரு  நிலைமை வந்துவிடக் கூடாது  என்று மக்களுக்கும், அரசுக்கும் ரெட் சிக்னல் காட்டும் படமாக இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ்  இயக்கி அளித்திருக்கும் இப்படம் ஒரு திரைப்படமாக கடந்து போகக் கூடிய கருத்து அல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்

மதராசி – ஒரு எச்சரிக்கை மணி.

Review By:

K Jayachandhiran

Trendingcinemasnow.com

 

 

 

 

Related posts

Revoke The Hike in Electricity Bill: Kamal Party Statement

Jai Chandran

சாதனையாளர் மானசா சவுத்ரி புதுமுகம் அறிமுகம்

Jai Chandran

நானி, ஸ்ரீகாந்த்தின் “தசரா” ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend