Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இந்திரா (பட விமர்சனம்)

படம்: இந்திரா

நடிப்பு: வசந்த் ரவி, மெஹரின் பிர்சடா , சுனில், அங்கீதா, கல்யாண் குமார், ராஜ்குமார்

தயாரிப்பு: ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்

இசை: அஜ்மல் தஷின்

ஒளிப்பதிவு: பிரபு ராகவ்

இயக்கம்: சபரீஷ் நந்தா

பிஆர்ஓ: சதீஷ் குமார் (S2 மீடியா)

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்த் ரவி கார் விபத்து காரணமாக பார்வை பாதிக்கப்பட்டதால் வேலையிலிருந்து விலகி வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது மனைவி தூக்கிட்டு இறக்கிறார். இது தற்கொலை அல்ல கொலை என்று சந்தேகப்படும் போலீசார்,  வசந்த் ரவியிடம் துருவித் துருவி விசாரிக்கிறார்கள். வசந்த் ரவியும் தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்து பழிவாங்க எண்ணுகிறார். கொலைகாரனை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா ? அவனை பழி வாங்கினாரா? என்பதற்கு ஆக்சன் அதிரடியாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

மர்மமான முறையில் மனைவி மெஹரின் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடையும் வசந்த் ரவி கண்பார்வை பறிபோன நிலையிலும் தனது போலீஸ் நண்பனை உதவிக்கு வைத்துக்கொண்டு கொலையாளியை  கண்டுபிடிக்க வெவ்வேறு இடங்களில் தேடி அலைவதும், ஒரு சிலரை சந்தேகம் அடைந்து அவர்களை தாக்குவது, அவர்களிடம் அடி வாங்குவது என காட்சிகள் சந்தேகத்தையும், விறுவிறுப்பையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு சில கட்டங்களில் இது வீட்டில் இருக்கும் பேயின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழும் வகையில் காட்சிகள் சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைக்கப்பட்டிருப்பது அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலை கிளப்புகிறது. இதற்கு மேல் காட்சியையும், கதையையும் விவாதித்தால் அது சஸ்பென்ஸை உடைக்கும் ஸ்பாய்லர் ஆகிவிடும்

கதாநாயகி மெர்ச்சிடாவை சுற்றி கதை பின்னப்பட்டிருந்தாலும் அவருக்கு அதிக வேலை இல்லை.

வில்லனாக வரும் வாலிபர் இலங்கை தமிழ் பேசுவதாக கூறி பேசும் வசனங்களில் மலையாள தமிழ்  வாடைதான் வீசுகிறது. ஆனால் வில்லத்தனத்தை வில்லங்கமாகவே செய்திருக்கிறார்.

காட்சிகளுக்கு சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் கூட்டுவதில் அஜ்மல் தஷின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு  சோடையில்லை.

சபரீஷ் நந்தா ஒரு குட்டி ஸ்டோரியை வைத்துக்கொண்டு கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாத வகையில் படத்தை இயக்கியிருப்பது சாமர்த்தியம். கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சியுடன் இருந்தாலும் கொலை செய்த இரண்டு பேர் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி  தப்புவதுபோல் காட்டியிருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை..

இந்திரா – லாஜிக் மிஸ் இருந்தாலும் பார்க்கத் தகுந்த சஸ்பென்ஸ் திரில்லர்தான்.

Revuew By

K.Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

Related posts

Delhi High Court Orders to Reveal Identities of Jawan Pirates!

Jai Chandran

முதன்முறையாக டைம் லூப் பாணி படம் ஜாங்கோ: இன்று பாடல் வெளியீடு

Jai Chandran

Chiranjeevi’s “Vishwambhara” First Look

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend