Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வார் 2 இரண்டு நாளில் இந்தியளவில் ரூ.115 கோடி வசூல்

இந்தியாவில் வார் 2 திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. வார் 2 வெளியான இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூலித்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் இதுவரை ரூ. 75 கோடி வசூலித்துள்ளது , தெலுங்கு பதிப்பு ரூ.40 கோடி வசூலித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வசூல் வார இறுதியில் காத்திருக்கிறது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மட்டும் ஹிந்தி பதிப்பில் ரூ. 46 கோடி வசூலுடன், இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 115 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. வார் 2 பட வெற்றியை கொண்டாடி, ஹ்ரித்திக் ரோஷன் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது படி, “திரையரங்குகளில் உங்கள் கொண்டாட்டங்களையும் கைத்தட்டல்களையும் காணும் போது என் மனம் நிறைவடைகிறது!”

ஜூனியர் என்டிஆரும் வார் 2 படத்தின் வெற்றியை கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது படி, ” வார் 2 படத்திற்கு நீங்கள் காட்டும் அன்பை நான் காண்கிறேன்.. அதற்காக உங்களின் அன்பை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிய எங்கள் படத்திற்கு கிடைக்கும் இந்த பொதுமக்களின் ஆதரவு நம்பமுடியாத ஒன்று ஆகும்.”

கியாரா அத்வானியும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார், அதன்படி, “உங்கள் அன்பு மிகச் சத்தமாகப் ஒலிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் பல்லவபுரம் மனை எண் 666 “

Jai Chandran

யோகி பாபுவின் ‘கங்கா தேவி’ பட பர்ஸ்ட் லுக்

Jai Chandran

நான் கடவுள் இல்லை விழாவில் இயக்குநர் எஸ் ஏ சி அதிரடி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend