Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கண்ணப்பா (பட விமர்சனம்)

படம்: கண்ணப்பா

நடிப்பு: சரத்குமார், மோகன்லால், மோகன் பாபு, அக்ஷய் குமார், பிரபாஸ், விஷ்ணு மன்சு, காஜல் அகர்வால், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரமானந்தம், பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம்,

தயாரிப்பு: டாக்டர் மோகன் பாபு

இசை: ஸ்டீபன் தேவசே

ஒளிப்பதிவு: ஷெல்டன் சாஹு

கதை திரைக்கதை: விஷ்ணு மன்சு

இயக்கம் : முகேஷ் குமார் சிங்

பிஆர்ஓ: அஸ்வத் சரவணன்

63 நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். வேடவர் குலத்தில் பிறந்த இவர் சிறுவயதில் தனது நண்பனை காளிக்கு பலி கொடுப்பதை பார்த்துவிட்டு அன்று முதல் கடவுள் மறுப்பாளராக இருக்கிறார். இதற்கிடையில் தங்கள் பகுதியை அழித்து அப்பகுதியில் உள்ள வாயு லிங்கத்தை கொண்டு செல்ல வரும் கூட்டத்தை தடுத்து அழிப்பதுடன், நாத்திகராக இருந்த இவர் எப்படி சிவனடியார் ஆனார், சிவலிங்கத்திலிருந்து ரத்தக்கண்ணீர் வடிவதை கண்டு அதை நிறுத்துவதற்கு தனது கண்களையே எப்படி தானமாக கொடுத்தார் என்பதை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது கண்ணப்பா திரைப்படம்.

பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் பல பக்தி படங்கள் வந்திருக்கின்றன, வண்ண படங்களாகவும் பல படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இந்த காலகட்டத்தில் அதாவது பான் இந்தியா படங்கள் வரும் காலகட்டத்தில் ஒரு பக்தி படம் அதுவும் நாயன்மார் படம் உருவாகி வருகிறது என்பதை அறிவித்தபோது இந்த படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப எப்படி உருவாக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கல்லாம் பதில் தரும் விதமாக கண்ணப்பா படத்தை உருவாக்கி அளித்திருக்கிறார்கள். அதற்காகவே அந்த படக் குழுவுக்கு குறிப்பாக கதை, திரைக்கதையில் அக்கறை கொண்டு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணு மன்சுக்கு ஒரு பெரிய பாராட்டு மாலை சூட்டலாம்.

கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது அது திண்ணன். படம் முழுக்க இந்த இயற்பெயர்தான் அவரது கதாபாத்திரம் குறிக்கப்படுகிறது, கிளைமாக்சில்தான் அவர் எப்படி கண்ணப்பன் ஆகிறார் என்பதை மனம் நெகிழ சித்தரித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி முழுவதும் எவ்வளவு கமர்ஷியலாக எடுக்க முடியுமோ அவ்வளவு கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.

விஷ்ணு மன்சுவும், அவரது ஜோடியாக நடிக்கும் பிரித்தியும் நடித்திருக்கும் காதல் காட்சிகள் நெருக்குமோ நெருக்கம். அந்த கால இயக்குனர் கர்ணன் இயக்கிய படத்தை பார்த்தது போன்ற ஒரு கிளுகிளுப்பு எழுகிறது.

விஷ்ணு மன்சு கண்ணப்பா கதாபத்திரத்திற்கு தன்னை எப்படி செதுக்க முடியுமோ அப்படி யெல்லாம் செதுக்கி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில்
ஆக்ரோஷம் காட்டி அதிரடி ஆக்ஷன்கள் மூலம் அனல் பறக்க வைக்கிறார்.

கிளைமாக்சில் விஷ்ணு மன்சு சிவ பக்தராக மாறும் காட்சிகள் கண்களை இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறது

சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து உருகுவது, வாயில் தண்ணீர் சுமந்து வந்து அபிஷேகம் செய்வது, தலையில் மலர் சூடி வந்து அதை லிங்கத்தின் மீது வைப்பது, பன்றி கறி சமைத்து படையலாக படைப்பது என கண்ணப்ப நாயனாரின் பக்தி பரவசத்தை 100% கண் முன் நிறுத்தி இருக்கிறார் விஷ்ணு மன்சு. அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் சிவலிங்க கண்களில் வடியும் ரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அதற்கு ஈடாக தனது கண்களை தோண்டி எடுத்து சிவலிங்கத்தில் பொருத்தும்போது மெய்சிலிர்த்துப் போகிறது.

சரத்குமார் வேடவர் கூட்டத் தலைவனாக வருகிறார். அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் வெவ்வேறு காட்சிகளில் சிவனாக நடித்திருக்கிறார்கள். இது தவிர பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

டாக்டர் மோகன் பாபு படத்தை தயாரித்திருப்பதுடன் வாயு லிங்கத்துக்கு பூஜை செய்யும் மகாதேவ சாஸ்திரியாக பக்தி பரவசத்துடன் நடித்திருக்கிறார்.

ஸ்டீபன் தேவசே பான் இந்திய இசை தந்திருக்கிறார்.

ஷெல்டன் சாஹு ஒளிப்பதிவு பசுமையை அள்ளி தெளித்திருக்கிறது.

கதை, திரைக்கதை எழுதியிருக்கும் விஷ்ணு மன்சுவின் ஆராய்ச்சி கலந்த எழுத்துக்கள் கண்ணப்பாவை முழுமை அடையச் செய்கிறது.

இயக்குனர் முகேஷ் குமார் சிங் முழுக்க முழுக்க ஒரு பக்தி படமாக இல்லாமல் என்பது சதவீதம் கமர்ஷியல் ரீதியாக இயக்கி ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டத்தை திரைக்குள் இழுக்க பார்த்திருக்கிறார்.

கண்ணப்பா – சினிமா ரசிகர்களுக்கு விருந்து.

Review By ஜெயச்சந்திரன். கே www.Trendingcinemasnoe com.

Related posts

கஸ்தூரிராஜா பட ஹீரோ இயக்கிய ரவாளி திரைப்படம்

Jai Chandran

சினிமாவில் முத்திரை பதித்த மானசா

Jai Chandran

இறுதி கட்ட பணிகளில்  அதர்வாவின் “குருதி ஆட்டம்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend