Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (பட விமர்சனம்)

படம்: சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

நடிப்பு: வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ஜான் விஜய், மணிகண்ட ராஜேஷ்

தயாரிப்பு: பாபி பாலச்சந்திரன்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: டிஜோ டாமி

இயக்கம்: விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ்

பி ஆர் ஓ: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

கஞ்சா விற்ற லிவிங்ஸ்டனை போலீசிடமிருந்து 2 சிறுவர்கள் காப்பாற்றுகிறார்கள். அவர்களை தன்னுடன் வைத்து வளர்க்கிறார் லிவிங்ஸ்டன். அவரது கூட்டாளி ரவுடி உசைன் இன்சூரன்ஸ் பணத்துக்காக தன் வீட்டில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்கு ஆட்களை அனுப்பும்படி லிவிங்ஸ்டனிடம் சொல்ல அதற்காக வைபவ் உள்ளிட்ட இரண்டு பேரை லிவிங்ஸ்டன் அனுப்புகிறார். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இதனால் காண்டான உசைனி, லிவிங்ஸ்டன் குடும்பத்தை கொல்ல முயற்சிக்கிறார். அவர்களை வைபவ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடியாக சொல் முயற்சிக்கிறது படம்.

காமெடி படம் என்று முதலிலேயே சொல்லி விடுகிறார்கள். சிரிப்பை தேடித்தேடி பார்க்க வேண்டியிருக்கிறது.
சிரிப்பு வரவேண்டும் என்பதற்காக வில்லன் நடிகர்கள் ஆனந்தராஜ், ஜான்விஜய் ஆகியோரை காமெடி நடிகர்களாக்கி இருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி இன்னும் சொல்ல போனால் வைபவை கூட காமெடி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்

தொலைந்து போன பணத்தை ஈடு செய்வதற்காக வங்கியில் கொள்ளையடிப்பதற்கு வைபவ், ஆனந்தராஜ் கேங் சுரங்கம் தோண்டுவது சினிமாத்தனமாக இருக்கிறது. சுரங்கத்திற்குள் செல்லும் ஆனந்தராஜ் வைபவ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி அடிக்கும் லூட்டி ஓரளவுக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

சுனில் ரெட்டி கையில் ஒரு மது டின்னை கொடுத்துவிட்டு அவரை குடிப்பதற்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை

லிவிங்ஸ்டன்தான் அடிவாங்கி, மிதி வாங்கி சிரிக்க வைக்க படாதபாடுபடுகிறார். ஜான் விஜய்யை செவிடு என்கிறார்கள் ஆனால் அந்த பாத்திரத்தை அவரால் கடைசி வரை சுமந்து செல்ல தெரியாமல் சில இடங்களில் காது கேட்பதுபோல் பேசுவதெல்லாம் அபத்தமாகிவிடுகிறது.

அதுல்யா ரவி, ஜவுளி கடை பொம்மைபோல் வருகிறார். தன்னுடைய பாத்திரத்தை எப்படி செய்வது என்பது தெரியாமல் திணறுகிறார்.

மறைந்த கராத்தே வீரர் உசைனி கடைசியாக நடித்த படம். இயக்குனர்கள் சொன்னதை செய்திருக்கிறார்.

பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

டி இமான் குழப்பமான இசையில் எல்லாம் சிதறிபோகிறது

டிஜோ டாமி ஒளிப்பதிவு ஓகே.

இயக்குநர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இயக்கத்தில் வசன காமெடியும் இல்லாமல், ஆக்ஷன் காமெடியும் எடுபடாமல் நாடகத்தனமாகி விடுகிறது.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – அருகில்  ஒருவரை அமர வைத்து இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வரும்.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

Thiru Veer, Aishwarya Pair movie Titled Oh Sukumari

Jai Chandran

கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

Jai Chandran

முகமது மன்னார் தயாரிப்பில் ‘சுமோட்டா’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend