Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டி என் ஏ (பட விமர்சனம்)

படம்: டி என் ஏ

நடிப்பு: அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்
:
தயாரிப்பு: ஜெயந்தி அம்பேத்குமார்

பாடல் இசை: ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ்

பின்னணி இசை: ஜிப்ரான் வைபோதா

ஒளிப்பதிவு: பார்த்திபன்

இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

பி ஆர் ஒ: யுவராஜ்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

ஆனந்த் (அதர்வா) குடும்பத்தில் மூத்த பிள்ளை என்றாலும் காதல் தோல்வியால் மனம் உடைந்து மதுக்கு அடிமையாகிறான். அவனுக்கு சிகிச்சை அளித்து மதுபழக்கத்திலிருந்து மீட்டு திவ்யா (நிமிஷா சஜயன்)வுடன் திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த பெண் சற்று கிறுக்கு த்தனமாக இருப்பத
தால் பைத்தியம் என்கின்றனர் சிலர்
மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் திவ்யாவை மணக்கிறார் ஆனந்த். திவ்யா கர்ப்பம் ஆகிறாள் பிரசவத்துக்கு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் குழந்தை பிறக்கிறது. குழந்தையை திவ்யா மற்றும் குடும்பத்தாரிடம் காட்டிவிட்டு இங்குபேட்டரில் வைத்துவிட்டு திரும்ப கொண்டு வருகின்றனர். அந்த குழந்தையை பார்த்ததும் தன் குழந்தை இது இல்லை என்கிறார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்
உண்மையிலேயே குழந்தை மாறிவிட்டதா? திவ்யா  பைத்தியமாகிவிட்டாரா? கணவர் ஆனந்த் எடுத்த முடிவு என்ன என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.

சில நல்ல படங்கள் எதிர்பாராமல் வந்து ஆச்சரியப்படுத்தும் அப்படியொரு படம்தான் டி என் ஏ. திவ்யாவாக நிமிஷா சஜயன், ஆனந்தாக அதர்வா நடித்திருக்கின்றனர்.

தொடக்க காட்சிகளில் மது குடித்துவிட்டு அதர்வா வீட்டுக்குள் வந்து வாந்தி எடுப்பது, மயங்கி விழுவது மற்றவர்கள் முன்னிலையில் குடும்ப மானத்தை வாங்கும்போதெல்லாம் இப்படியொரு வேடத்தில் அதர்வா நடிக்க வேண்டுமா என்று கோபமும் ஏற்பட்டது நல்ல வேளையாக கொஞ்ச நேரத்திலேயே அந்த பாத்திரத்திலிருந்து மீண்டுவிடுகிறார்.

நிமிஷா சஜயனை திருமண மேடையில் வைத்து பலரும் “பைத்தியம்” என்று சொல்லி அவரை அதர்வா மணக்கக் கூடாது என்று சொல்லும்போது “என் மனைவி இவர்தான்” என்று நிமிஷாவை அதர்வா கைபிடிக்கும்போது பெண்கள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் அதர்வா.

மருத்துவமனையிலிருந்து குழந்தை கடத்தல், போலீஸ் சேசிங், கோர்ட்டு விசாரணை என எதிர்பாராத திருப்பங்களுடன் கதை பயணிக்கும்போது அரங்கே கதையோடு ஒன்றி சைலன்ட் ஆகிவிடுகிறது.

கிளைமாக்சை கோயில் விழாவில் வைத்திருப்பது ஒரு அட்ராக்ஷன் என்றால் அந்த காட்சியில் நிமிஷாவும், அதர்வாவும் காட்டியிருக்கும் நடிப்பு அரங்கில் அப்ளாஷ் எழ வைக்கிறது. நிமிஷா சஜயன் நடிப்பு அரக்கியாகி விடுகிறார். குழந்தையை வெளிநாட்டவர் எடுத்துக்கொண்டு தப்பிக்கும்போது அது நம்ம குழந்தை என்று சத்தமாக சொல்லி பரபரப்பை அதிகரிக்கச் செய்கிறார்

போலீஸ் அதிகாரியாக வரும் பாலாஜி சக்திவேல் தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு எஸ் வி ரங்காராவ்.

சுப்ரமணியம் சிவா, மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா , கருணாகரன் போஸ் வெங்கட் தவிர்க்க முடியாத பாத்திரங்கள்.

எலியை வைத்து மான்ஸ்டர் படத்தில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் டி என் ஏ படத்தில் கைக்குழந்தை சென்ட்டிமென்ட்டை வைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். வெற்றிக்கு ஏங்கி கொண்டிருந்த நெல்சன் வெங்கடேசனின் ஒரு கிரீடமாக இப்படத்தின் வெற்றி அமையும்

ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் என 5 இசை அமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசை அமைத்து திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு உறுதுணையாக கனமான பின்னணி இசை அமைத்து தூணாக நின்றிருக்கிறார் இசை அமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா

பார்த்திபன் ஒளிப்பதிவும், நறுக்கான எடிட்டிங் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறது.

அம்பேத்குமார் வழங்க ஜெயந்தி அம்பேத்குமார் படத்தை தயாரித்திருக்கிறார்

ரெட் ஜெயன்ட் நிறுவனம் ரிலீஸ் செய்திருப்பது நல்ல படம் என்பதற்கு கிடைத்த அக்மார்க் முத்திரை.

டி என் ஏ – குடும்ப சகிதமாக பார்க்க வேண்டிய அவசிய படைப்பு.

 

 

 

 

 

 

Related posts

Arun Vaidyanathan to direct and produce a film for children

Jai Chandran

நடிகர் சித்தார்த் பற்றி நடிகை பார்வதி

Jai Chandran

ஹிருது ஹாரூன் நடிப்பில் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend