Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ’கைமேரா’

பான் இந்தியா ரிலீஸுக்குத் தயாராகும் சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’

பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.

‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.

தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.

இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்..

கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..

மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.

மிருகங்களுக்குள்ளேயே வேறு மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டு அதன் குணாதிசயங்கள் எவ்விதம் மாறுபட்டு இருக்கின்றன என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. அதை மையப்படுத்தித் தான் ‘கைமேரா’ என டைட்டில் வைத்துள்ளோம்.

கைமேரா என்பது மராத்திய மொழி வார்த்தை. இதை மனோ ராஜ்ஜியம் (மரபணுக்கள் மாற்றம்) என சொல்லலாம்.

பெங்களூருவைச் சுற்றி நிகழும் கதைக்களம் என்பதால் கர்நாடகாவில் பெங்களூர், ஹம்பி, இங்கே ஓசூர், ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் நாயகன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் படப்பிடிப்பு முடிந்த கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே அதிலிருந்து மீண்டார்..

படம் பற்றி இயக்குநர் மாணிக் ஜெய் கூறும்போது, “சயின்டிஃபிக் கிரைம் திரில்லர் படம் இது. ஒரு மனிதனின் உடம்புக்குள் மிருகத்தின் செல்களை புகுத்தினால் என்கிற புதிய கோணத்தில் யாரும் சொல்லாத ஒரு கதையாக புது அனுபவமாக இருக்கும். சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு ஒரு யூகிக்க முடியாத கதையாக இது இருக்கும் அதேசமயம் படம் முழுவதிலும் நகைச்சுவைக்கு குறைவில்லாமலும் அதேசமயம் குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்.. ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்திற்கு புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைத்துள்ளோம்..

இந்தப் படத்தை எந்த மொழியில் பார்த்தாலும் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது ரிலீஸாக இருக்கிறது.

இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உன்னி கிருஷ்ணன், சத்யபிரகாஷ், பிரசன்னா,. அனுராதா பட், மானஸா ஹொல்லா மற்றும் அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்கள் பாடியுள்ளனர்.

குறிப்பாக பிரபல பாடகி அனுராதா பட்டுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடித்துப்போனதால் எல்லா மொழியிலும் நானே பாடுவேன் என விரும்பி கேட்டு ஒரு பாடலை ஐந்து மொழிகளிலும் பாடியுள்ளார்.

தற்போது சென்சாருக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையடுத்து அனைத்து மொழிகளிலும் இதற்கான புரமோஷன் பணிகள் துவங்கப்பட இருக்கின்றது, விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது” என்று கூறினார்..

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பு ; ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் / மாணிக் ஜெய்.N

இயக்கம் ; மாணிக் ஜெய், N

ஒளிப்பதிவு ; வினோத்

படத்தொகுப்பு ; நவீன்

இசை ; விக்னேஷ்ராஜா

ஸ்டண்ட் ; synt சூரி

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Related posts

குடியரசு தினத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலவரம்.. நடந்தது என்ன?

Jai Chandran

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்! தேவதாஸ் பார்வதி!

Jai Chandran

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதல்வர் தலைவர்கள் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend