Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கேங்கர்ஸ் (பட விமர்சனம்)

படம்: கேங்கர்ஸ்

நடிப்பு: சுந்தர்.சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், விச்சு, மைம் கோபி, முனிஸ்காந்த், அருள்தாஸ் ஹரிஷ் பெராடி, சந்தனபாரதி, மாஸ்டர் பிரபாகர், மது சூதனராவ், ரிஷி இவர்களுடன் கவுரவ தோற்றத்தில் விமல்

தயாரிப்பு: குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd),
ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)

இசை: சி.சத்யா

ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணமூர்த்தி

திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்

இயக்கம்: சுந்தர் சி

பிஆர் ஒ: சதீஷ் (AIM}

கிரி, வின்னர்படங்களுக்கு பிறகு  சுந்தர் சி, வடிவேலு இணைந்து மீண்டும் 14 வருடங்களுக்கு பிறகு  இணைந்து  தந்திருக்கும் மற்றொரு காமெடி மெகா வெற்றி படம் என்று கேங்கர்ஸ் படத்துக்கு முதலிலேயே முத்திரை குத்திவிடலம்.

ஹரிஷ் பெராடி ,, மைம் கோபி, அருள்தாஸ் மூவரும் அண்ணன் தம்பிகள். போலீசை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு  சட்ட விரோத வேலைகள் செய்கின்றனர்.  அவர்கள் நடத்தும் பள்ளியில் ஒரு மாணவி காணமல் போகிறார்.அதுகுறித்து அந்த பள்ளி டீச்சர் கேத்ரின் தெரசா போலீஸுக்கு தகவல்  தருகிறார்.  அதே சமயம் அந்த பள்ளியில் பி டி மாஸ்டராக வேலைக்கு சேர்கிறார் சுந்தர்.சி. மைம் கோபியின் சட்ட விரோத வேலைகளை மாறுவேடம் போட்டு வந்து தாக்குதல் நடத்தி தட்டிக் கேட்கிறார். தங்கள் மீது தாக்குதல் நடத்துவது யார் என்று  தெரியாமல் மைம் கோபி தவிக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷ்  பெராடியின் மகனை சுந்தர் சி பயங்கரமாக தாக்கி உயிரை உசலாட்டத்தில் வைக்கிறார். இதற்கு காரணம் என்ன? மைம் கோபியால்  சுந்தர் சியின் தாக்குதலை எதிர்கொள்ள முடிகிறதா? என்பதற்கு கேங்கர்ஸ்  கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

படமே சுந்த்ர்.சி,வடிவேலு சேர்ந்து செய்யும்  நகைச்சுவை அலப்பறையில்தான் தொடக்கம் முதல் கடைசிவரை வேகம் குறையாமல் பறக்கிறது. வழக்கமாக  பெரிய ஹீரோக்களின் பெயர்களை  திரையில் காட்டும்போதுதான் விசில் பறக்கும் இதில் சுந்தர். சி டைரக்‌ஷன் என்று டைட்டில்  வந்ததுமே விசில் பறக்கிறது. அதைத் தொடர்ந்து வடிவேல் என்ட்ரிக்கும் விசில் காதை பிளக்கிறது.

புட்பால் ஆட்டத்தில் நான்தான் கெத்து என்னை மீறி ஒரு கோல் கூட உன்னால் போடமுடியாது என்று சவால் விடும் வடிவேலுவை,  சுந்தர்சி  புட்பாலை அடித்து பறக்க விடும் முதல் காட்சியிலேயே அரங்கம் சிரிப்பலையில் அதிர தொடங்குகிறது, அதன்பிறகு இவர்கள் வரும்   ஒவ்வொரு காட்சியும் வயிற்றை பதம்பார்க்கிறது.

வடிவேலுக்கு பெண் வேடம், அம்மன் வேட்ம்,  லாக்கரை திறக்க வரும்   கீமேன் வேடம் என்று   எத்தனை கெட்டப் என எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மாறு வேட கெட்டப்போட்டு ஒவ்வோரு எபிசோடிலும் காமெடி தாறுமாறு தக்காளி சோறு செய்திருக்கிறார்கள். மைம் கோபியிடம் அடிவங்காமல் தப்பிக்க  ”யாரையும் நான் அடிச்சதில்லை..” என்ற வசனத்தை  வடிவேலு மூச்சு விடாமல்பேசுவது அப்ளாஸ் அள்ளுகிறது.  இடையில் ஓய்ந்திருந்த வடிவேலுவின் காமெடி கொடியை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஏற்றி  வைத்திருக்கிறார்.  சுந்தர் சி.

வடிவேலுவே செண்டர் காமெடியனாக இருந்து அந்தர் செய்கிறார். அவருடன் முனிஸ்கந்த், பக்ஸ், சந்தானபாரதி மற்றும் ஸ்டண்ட் வீரர்கள் பக்க துணையாக இருந்து அதிரடி கிளப்புகிறார்கள்.

கேத்ரின் தெரசா கவர்ச்சி பாடலில் இளவட்டங்களை ஏங்க வைகிறார்.அதே சமயம் ரவுடிகளுக்கு பயப்படாமல் துப்பற்றியும்  வேலைகள்  செய்து  நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ்.அருண்குமார் இணைந்து இப்படத்தை அதிக பொருட செலவில்  தயாரித்திருக்கின்றனர்.

மத கஜ ராஜா வின் வெற்றியை தொடர்த்து இயக்குனர் சுந்தர் சிக்கு மற்றொரு வெற்றி படமாக கேங்கர்ஸ் அமைந்திருக்கிறது.

சுந்தர்.சியின்   ஆஸ்தான வசனகர்த்தா – வேங்கட்ராகவனின்  கைவண்ணம் இப்படத்தில் கூடுதலாக  ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

-சத்யா இசை, ஈ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு ஓவர் லோட் ஆகாமல் சீன்களோடு  ஒன்றியிருப்பது நலம்.

கேங்கர்ஸ் – கவலையை மறந்து குழந்தை குட்டி என்று குடுபத்துடன் அமர்ந்து  ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.

 

Related posts

ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு முதல்வர் ஸ்டாலின், எம் எல் ஏ உதயநிதிக்கு நன்றி

Jai Chandran

Papillon Movie From April 23

Jai Chandran

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்”.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend