Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வருணன் God of water (பட விமர்சனம்)

படம்: வருணன் God of water

நடிப்பு: ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த், கேப்ரில்லா, ஹரிப்ரியா, சங்கர் நாக் விஜயன், பிரிய தர்ஷன், ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன் ஹைடி கார்த்தி, கவுசிக், கிரண்மய், தும்கன் மாரி, பேபி ஜாய்ஸ், ஐஸ்வர்யா

தயாரிப்பு: கார்த்திக் ஶ்ரீதரன்
:
இசை: போ போ சசி

ஒளிப்பதிவு: எஸ்.ஶ்ரீரமா சந்தோஷ்

இயக்கம்: ஜெயவேல் முருகன்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

90 காலகட்டங்களில் வடசென்னை ராயபுரம் பகுதியில் கேன் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்கின்றனர் ராதாரவி, சரண்ராஜ். தனித்தனியாக பிஸ்னஸ் செய்தாலும் ஒருவர் எரியாவுக்குள் இன்னொருவர் வருவதில்லை என்பதால் சண்டை சச்சரவு இல்லாமல் தொழில் நடக்கிறது. ஆனால் இவர்களிடம் கேன் வாட்டர் போடும் வேலை செய்யும் துஷ்யந்த் மற்றும் பிரியதர்ஷன் அவ்வப்போது சரண்ராஜ் கேங்குடன் சிறு சிறு மோதலில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் இது இருதரப்புக்கும் பெரிய மோதலாக வெடிக்கிறது. இதன் எதிர்வினையாக கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த மோதல் எங்கு சென்று முடிகிறது என்பதற்கு அதிர்ச்சியுடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

வயதுக்கு ஏற்ற தோற்றத்துடன் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து ராதாரவி கண்ணியமான வாட்டர் கேன் சப்ளை நிறுவன அதிபராக நடித்திருக்கிறார். வாட்டர் கேன் சப்ளை செய்யும் பாய்களாக துஷ்யந்த், பிரியதர்ஷன் முதலில் நெல்லைக்காரன், மதுரைக்காரன் என்று நக்கலடித்து மோதிக் கொள்கின்றனர். பின்னர் ஊர் வம்பு எதற்கென்று காம்ப்ரமைஸ் ஆகிறார்கள்.

இளவட்ட தெம்பில் துஷ்யந்த் – கேப்ரில்லா ஜோடியும், பிரியதர்ஷன் – ஹரிப்ரியா ஜோடியும் காதல் விளையாட்டு சின்னபிள்ளைத்தனமாக வந்திருக்கிறது.

சரண்ராஜ் மச்சானுடன் துஷ்யந்த் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி வாட்டர் பிளான்ட் டவர் மீது பதறவைக்கும் விதமாக படமாக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் எங்கோ வாட்டர் கேன் குடோனுக்குள் சரண் ராஜ் சண்டைக்காட்சி பரிதாபமாக உள்ளது.

கார்த்திக் ஶ்ரீதரன் தயாரித்திருக்கிறார்.
:
போ போ சசி இசை,
எஸ்.ஶ்ரீரமா சந்தோஷ் ஒளிப்பதிவு ஓ கே ரகம்.

இயக்குனர் ஜெயவேல் முருகன் டைவர்ஷன் இல்லாத இயக்கம் லோக்கல் புள்ளிங்கோக்களை கவரும்

வருணன் – வாட்டர் கேன் வார்.

Related posts

Director Deepak Sundarrajan Talks abour ANNABELLE SETHUPATHI Movie:

Jai Chandran

Vetrimaran organises memorial service for Late.Vetri Duraisamy

Jai Chandran

ராஜமவுலியின் “வாரணாசி ” ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend