Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் எட்ரியன் – நடிகை மிகே

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 97 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்ற ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கு 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டுருந்தது. ஆங்கிலம் அல்லாத ஒரு வெளிநாட்டுத் திரைப்படம் இத்தனைப் பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இதற்கு அடுத்ததாக தி ப்ரூட்டலிஸ்ட் (THE BRUTALIST), விக்கட் (WICKED) என்கிற ஆங்கிலத் திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டன. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்ப்ளீட் அன்னோன் (A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் தலா 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இந்தியா சார்பில் சிறந்த குறும்படம்’ பிரிவில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த `அனுஜா’ என்கிற குறும்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

97 – வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் வென்ற திரைப்படங்களின் முழுப் பட்டியல் வருமாறு:

சிறந்த நடிகர் – ஏட்ரியன் ப்ரோடி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த நடிகை – மிகே மேடிசன் (அனோரா)

சிறந்த திரைப்படம்  –  அனோரா

சிறந்த இயக்குநர் – சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த திரைக்கதை – சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த படத்தொகுப்பு –  சேன் பேக்கர் (அனோரா)

சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த துணை நடிகர் – கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)

சிறந்த துணை நடிகை – சோய் சல்டானா (எமிலியா பெரெஸ்)

சிறந்த பாடல் – எல் மால் (எமிலியா பெரெஸ்)

சிறந்த பிண்ணனி இசை – டேனியல் ப்ளம்பெர்க் (தி ப்ரூட்டலிஸ்ட்)

சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்

சிறந்த ஆவணக் குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐயம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)

சிறந்த அனிமேசன் திரைப்படம் – ஃப்ளோ

சிறந்த அனிமேசன் குறும்படம்  – இன் தி ஷேடோ ஆஃப் சைப்ரஸ்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்கட்

சிறந்த ஒலி வடிவமைப்பு – ட்யூன் 2

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ட்யூன் 2

சிறந்த திரைக்கதை (தழுவல்)  – பீட்டர் ஷ்ட்ராகன் (கான்கிளேவ்)

சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) – ஐயம் நாட் எ ரோபாட்

சிறந்த ஒப்பனை – தி சப்ஸ்டன்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்கட்)

இதில், அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றது. இயக்குநர் சேன் பேக்கர் 4 விருதுகளை வென்று சாதனை படைத்தார். ஒரு படத்திற்கு இயக்குநர் வென்ற அதிகபட்ச விருதுகள் இதுவாகும்

இதை அடுத்து, தி ப்ரூட்டலிஸ்ட் படம் 5 விருதுகளையும் ட்யூன் 2, எமிலியா பெரேஸ், விக்கட்  படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றன.
இந்தியா படங்கள் எதற்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

Related posts

மார்கழி திங்கள் திருப்பாவை: 8 நடிகைகள் பாடி அசத்தல்

Jai Chandran

என்னை வாழ விடுங்கள் – சோனா கண்ணீர்

Jai Chandran

தென் மாவட்ட பின்னணி கதையில் விக்ராந்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend