Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

35 சின்ன விஷயம் இல்ல (பட விமர்சனம்)

படம்: 35 சின்ன விஷயம் இல்ல

நடிப்பு: நிவேதா தாமஸ், விஸ்வ தேவ்    கே பாக்யராஜ் , அருண் தேவ்,

தயாரிப்பு: சுரேஷ் ப்ரொடக்ஷன்

இசை: விவேக் சாகர்

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

இயக்கம்: நந்தா கிஷோர் இமானி

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

கண்டக்டர் வேலை செய்யும் அருண் தேவ், நிவேதா தாமஸ் தம்பதிகள் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வாழ்க்கை வாழ்கின்றனர். இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை 100 மார்க் வாங்கி தேர்ச்சி பெறும் புத்திசாலி மற்றொரு மகன் கணக்கு பாடத்தில் ஜீரோ. பள்ளியில் சேரும் இரண்டாவது மகன் ஆசிரியர்களிடம் கணக்குப் பற்றி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக் கொள்கிறான். அவனை கணக்கு ஆசிரியர் ஜீரோ என்று அழைத்து அவமானப்படுத்துகிறார். தன் மகனை கணக்கு பாடத்தில் பாஸ் மார்க் வாங்கச்  செய்வது என் வேலை என்று முடிவு செய்கிறார தாய் நிவேதா. ஆசிரியரால் முடியாததை ஒரு தாய் எப்படி செய்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

ஆக்சன் படம்,  குத்து வெட்டு, ஜாதி படங்கள் என சமீப காலத்தில் எல்லா மொழிகளிலுமே ஒரு டிரெண்டாகி  ரசிகர்களை டென்ஷனாக்கி வருகிறது. ரிலாக்ஸ் ஆக ஒரு குடும்பப்படம் ஒரு குழந்தைகளுடன்  பார்க்கலாம் என்று பார்த்தால் கண்ணுக்குட்டி தூரம் எந்த படமும் பெரிதாக வந்தது போல் தெரியவில்லை.  அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் தெலுங்கில் இருந்து டப்பிங் ஆகி  தமிழுக்கு வந்திருக்கிறது 35 சின்ன விஷயம் இல்ல..

பட டைட்டிலை பார்த்தவுடன்  இது ஏதோ வயதுக்கு வந்தவர்கள் பற்றிய படம் என்று எண்ணத் தோன்றும் ஆனால் 35 என்பது பள்ளிக்கூடத்தில் வாங்க கூடிய பாஸ் மார்க் பற்றிய ஒரு கதை.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நிவேதா தாமஸ் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இதில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அருண் தேவ் நடித்துள்ளார்.

கணவன் மனைவியாக இவர்களுக்குள் இருக்கும் அந்நோன்யம் அவ்வளவு இயல்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நிவேதா தாமஸ் கொழுக் மொழுக் அம்மாவாக வந்தாலும் கண்களில் காட்டும் அசைவுகள்,  சைகைகளும் உதட்டில் காட்டும் நமட்டு சிரிப்பும் ஒருவித ஈர்ப்பை தருகிறது.

இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் படிப்பில் குறிப்பாக கணக்கில் ஜீரோ மார்க் வாங்குவது எவ்வளவு பெரிய அவமானத்தை பெற்றோருக்கும் அந்தப் பிள்ளைக்கும் தேடித் தருகிறது  என்பதை இப்படம் அற்புதமாக உணர்த்துகிறது.

கணக்கில் ஜீரோ மார்க் வாங்கும் மாணவனை,  கறார் கணக்கு வாத்தியார் விஸ்வதேவ் படுத்தும் பாடு சரி வில்லத்தனம்..

நிவேதா  தாமஸுக்கு கணக்கு சொல்லித் தரும் தோழியாக கௌதமி நடித்திருக்கிறார், பள்ளி பிரின்ஸ்பாலாக கே பாக்யராஜ் வேடமேற்றிருக்கிரார்.

படிப்பு வராத பிள்ளைக்கு வேத மந்திம்  கற்றுத்தர தந்தை முடிவு செய்யும்போது  மகனுக்கு படிப்பு தான் முக்கியம் என்று ஒரு முக்கிய கருத்தை நிவேதா தாமஸ் வாயிலாக இயக்குனர் நந்தா கிஷோர் இமானி வலியுறுத்தி  இருப்பது ஒரு புரட்சி கருத்து.

35  சின்ன விஷயம் இல்ல – பிற்போக்கு சிந்தனைக்கு சமட்டி அடி

 

 

Related posts

Catch the Glimpse of our next, Richard Anthony

Jai Chandran

ஒரே ஷாட்டில் உருவான  டிராமா திரைப்படம். 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..

Jai Chandran

ISHARI GANESH elected President of Tamil Nadu Olympic Association

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend