Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விடுதலை2ம் பாகம் (பட விமர்சனம்)

படம்: விடுதலை 2 ம் பாகம்

நடிப்பு: விஜய் சேதுபதி, சூரி, கிஷோர், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், அனுராக் கஷ்யப், சேத்தன், ராஜுவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் , இளவரசு

தயாரிப்பு: எல்ரெட் குமார்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்

இயக்கம்: வெற்றிமாறன்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது விடுதலை இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக கூறி பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கை கதையாக உருவாகி இருக்கிறது விடுதலை இரண்டாம் பாகம்.

கிராமத்தில் பண்ணையார் ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகிறார். பண்ணையார் மீது பெருமாள் வாத்தியார் போலீசில் புகார் தருகிறார். அந்த புகாரை கண்டும் காணாமல் விடுகிறது போலீஸ்.  இந்நிலையில் பக்கத்து ஊர் மில்லில் செங்கொடிச் சங்கம் அமைக்க செல்கிறார் பெருமாள் வாத்தியார். அங்கு தொழிலாளர்கள் மீது முதலாளிகள் செய்யும் அட்டூழியத்தை தட்டி கேட்கிறார். இதையடுத்து  பெருமாள் வாத்தியார் மீது நக்சலைட் தீவிரவாதி என்று போலீசார் முத்திரை  குத்துகின்றனர். இதனால் பெருமாள் வாத்தியார் தலை மறைவாகிறார்  அவரை போலீஸ் தேடுகிறது. இதனால் மலைப்பகுதி மக்களை முகாம்மில் அடித்து  கொடுமை படுத்துகின்றனர். போலீசின் அராஜகத்தை பெருமாள் வாத்தியார் துப்பாக்கியால் எதிர்கொள்கிறார். போலீஸ் கையில் பெருமாள் வாத்தியார் சிக்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் எதிர்பாராத திருப்பங்களாக அமைகிறது.

நக்சலைட் தீவிரவாதியாக விஜய் சேதுபதி வேடமேற்றிருக்கிறார் இதுவரை அவர் எந்தவொரு படத்திகும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கவில்லை.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் பள்ளி வாத்தியாராக இருக்கும் விஜய் சேதுபதி மெல்ல மெல்ல புரட்சிக்காரனாக மாறும் காட்சிகள் வாழைப்பழத்தில் பூசி ஏற்றுவது போல் ஏற்றியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

போலீஸ் பிடியில் சிக்கும் விஜய் சேதுபதி , போலீஸ் அதிகாரி கௌதம மேனன் விசாரணைக்கு உட்பட்டு இருந்தாலும் அவரை அதிகாரி என்று கூட பார்க்காமல் போடா என்று விஜய் சேதுபதி ஒருமையில் பேசும்போது அரங்கில் அதிர்வலை ஏற்படுகிறது.

அடுத்த காட்சியில் விஜய் சேதுபதி நிர்வாண கோலத்தில் விசாரணைக்கு  உட்படுத்தப்படுவது அதிர்ச்சியை பரவ செய்கிறது.

காட்டுப்பாதையில் கை விலங்கிட்டு விஜய் சேதுபதியை  போலீஸ் அதிகாரி சேத்தன் என்கவுண்டர் செய்ய அழைத்துச் செல்லும் நிமிடங்கள் திக் திக் என செல்கிறது.

மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் தமிழ்,  தீவிரவாதியான விஜய் சேதுபதியை மலைப்பகுதியில் விரட்டிச் சென்று பிடிப்பது துப்பாக்கி தோட்டாக்கள் சிதறும் விறுவிறுப்பு காட்சிகள்

விஜய் சேதுபதி மனைவியாக இடதுசாரி சிந்தனை உடன் கூடிய பெண்ணாக வருகிறார் மஞ்சு வாரியர். வேடத்தை புரிந்து கொண்டு எளிமையாகவும் அழகாவும் நடித்திருக்கிறார்.

முதல் பாகத்தில் கதை நாயகனாக நடித்த  சூரி இரண்டாம் பாகத்தில் கிளைமாக்சில் மட்டுமே சோபிக்கிறார்.

எல்ரெட்  குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா  இசையில் மனசுல மனசுல, தினம் தினம் பாடல்கள் மனசுக்குள் ஊடுருவுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் சாதி மதம் இனத்தால் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிக்காரர்களை சவுக்கடி கொடுத்து சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

விடுதலை 2ம் பாகம் – சிவப்பு சிந்தனையை இளைய தலைமுறைக்கு கடத்தும் வெற்றிமாறன்.

 

 

 

 

 

 

 

 

Related posts

ரவுடி பேபி பாடல் சாதனை மேல் சாதனை..

Jai Chandran

தாரளப்பிரபு நாயகி தான்யா ஹோப்பின் தாராள குணம்!

Jai Chandran

எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருது: அரசுக்கு கமல் முக்கிய கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend