டாக்குமென்ட்ரி படம்: நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara – Beyond The fairy Tale)
நடிப்பு: நயன்தாரா, விக்னேஷ் சிவன்
இயக்கம்: அமித் கிருஷ்ணன் :
ரிலீஸ்: Netflix O T T
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்
பிரபல நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனை எட்டு வருடங்களாக காதலித்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு முன்பு நயன்தாராவுக்கு இன்னொரு காதலும் இருந்தது. அது பற்றி சர்ச்சைகள் பத்திரிக்கை, மீடியாக்களில் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நாள் குறிக்கப்பட்டு இந்து முறைப்படி தாலி கட்டி நடைபெற்றது. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய காதலுக்காக இந்துவாக மாறி விக்னேஷ்சிவனை மணந்தார்.
சிறு வயது முதல் தொடங்கி நடிக்க வந்து திருமணம் செய்தது, தன் வாழ்வில் ஏற்பட்ட இன்ப, துன்பங்கள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்து நயன்தாரா பியான்ட் தி ஃபேரி டேல் என்ற பெயரில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய டாக்குமெண்ட்ரி படமாக உருவாகி இருக்கிறது. இந்த டாக்குமெண்ட்ரி NETFLIX OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நயன்தாரா மலையாள படத்தில் முதன்முறையாக எவ்வாறு சினிமாவில் நடிக்க வந்தார் என்பதை அவரை வைத்து முதல் முதலாக படம் இயக்கிய சத்தியன் அந்திக்காடு விளக்கும் சம்பவம்.
பின்னர் தமிழ் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்ற தகவல்கள், ஒரு கட்டத்தில் மனம் உடைந்து இனி நடிப்பு வேண்டாம் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் அவருக்கு பிரபல நடிகரிடம் இருந்து நடிக்க வந்த வாய்ப்பு அதை ஏற்று பிரபலமான நடிகையாக மாறிய தருணங்கள் என நயன்தாரா வாழ்வில் நடந்த பல ருசிகர சம்பவங்கள் பற்றி இந்த டாக்குமெண்டரியில் இடம் பெற்றிருக்கிறது.
இயக்குனர்கள் சத்தியன் அந்திக்காடு, ஃபாசில், அட்லி, நெல்சன், நடிகர்கள் நாகார்ஜுனா, ராணா ட,குபதி, விஜய் சேதுபதி, நடிகைகள் ராதிகா, தமன்னா போன்றவர்கள் நயன்தாரா குறித்து கூறிய உண்மைச் சம்பவங்கள் இதுவரை படாத சில தகவல்கள் போன்றவையும் இதில் உள்ளது.
நயன்தாரா தனது முதல் காதலில் ஏற்பட்ட தோல்வி பற்றி மனம் திறக்கும் தகவல் ஒரு ஷாக். அவருக்கு கண்டிஷன் போட்ட அந்த காதலன் யார்? என்ற கேள்விக்கு விடை?
டாக்குமென்டரி என்பதால் எல்லோரும் சேரில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு இது சலிப்பு தட்ட வாய்ப்புள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது தன் சொல்படி கேட்கும் ஒரு நபர் தான் தனக்கு கணவனாக வரவேண்டும் என்று தேடித் தேடி விக்னேஷ் சிவனை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டது இந்த டாக்குமென்ட்ரி மூலம் உறுதியாகிறது.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு சில வசனங்கள் வரும்.. அந்த வசனங்கள் விக்னேஷ் சிவனுக்கு சரியாக பொருந்தும்.
ஒரு காட்சியில் ராம்தாஸ் தன் மகள் ஜெயலலிதாவிடம் கூறும்போது, “நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்” என்பார். அதுபோல் இன்னொரு காட்சியில் நாகேஷ் சக நண்பரிடம் கூறும்போது, ” பொண்டாட்டிய அடக்கி பாக்குறேன்.. இல்லன்னா அடங்கியே போறேன்” என்று வீர வசனம் பேசுவார் இந்த இரண்டு வசனங்களும் விக்னேஷ் சிவனுக்கு சரியாக பொருந்தும்.
இப்படி சொல்வதற்கு காரணம்.. விக்னேஷ் சிவனே டாக்குமெண்டரியில் பேட்டி அளிக்கும்போது , ” என்னுடைய கருத்தை சொல்லிப் பார்ப்பேன் ஏற்காவிட்டால் நயன்தாரா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வேன்” என்று பட்டவர்தனமாக கூறுகிறார்.
இன்னொரு காட்சியில் வீடு முழுக்க கொசு உள்ளே புகாதபடி கொசு வலைபோட்டு பாதுகாக்கப்பட்டு இருந்தாலும், விக்னேஷ் சிவனின் கழுத்தாமட்டையில் நயன்தாரா கொசுவை அடிக்கும் சாக்கில் படார் என்று அடிவிடுகிறார் அந்த அடியையும் விக்னேஸ்சிவன் வாங்கிக் கொண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்..
டாக்குமெண்டரி மூலம் வீட்டு ரகசியங்கள் விதிக்கும் வந்திருக்கிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு தனுஷ், விஷால் என பிரபல நடிகர்களுடன் நயன்தாரா நடித்திருந்தாலும் அவர்கள் யாரும் இந்த டாக்குமெண்டரியில் நயன்தாரா பற்றி எந்த கருத்தும் சொல்லாதது பெரிய ஏமாற்றம் மட்டுமல்ல புரியாத புதிராக இருக்கிறது.
நயன்தாரா டாக்குமென்ட்ரி- அறிந்தும் அறியாமலும்…

