Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், ரஜினி இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மமும.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் டெல்லி கணேஷ். வில்லன் வேடங்களிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக இவர் 1976 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினம் பிரவேசம் படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பசி, சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 மேலும் விசு இயக்கிய படங்கள என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக் கிறார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள செந்தமிழ் நகரில் டெல்லி கணேஷ் வசித்து வந்தார். 80 வயதாகும் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில்
நேற்று இரவு 11.30 மணியளவில் உயிர் மரணமடைந்தார்.

டெல்லி கணேஷ் 1976-ல் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றினார்.

டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர் களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ் நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது”ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

முதல்வர் இரங்கல்:

டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
மூ”த்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். டெல்லி கணேஷின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு; இன்றளவும் தான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கவைத்தவர் டெல்லி கணேஷ் ” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல்:

என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி

Related posts

தமிழகத்தில் 1, 30, 261 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Jai Chandran

சாதனையாளர்களுக்கு தலை நிமிர் விருதுகள்..

Jai Chandran

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend