படம்: தீபாவளி போனஸ்
நடிப்பு: விக்ராந்த், ரித்விகா, ஹரிஸ் மற்றும் பலர்
தயாரிப்பு: தீபக் குமார் தாலா
இசை: மரியா ஜெரால்டு
ஒளிப்பதிவு: கௌதம் சேதுராம்
இயக்கம்: ஜெயபால்
பி ஆர் ஓ: தர்மா சுரேஷ்
கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் விக்ராந்த் போதிய சம்பாத்தியம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவரது மனைவி ரித்விகா வீட்டு வேலை செய்கிறார். நிறுவனத்தில் போனஸ் கிடைத்தால்தான் மகனுக்கு புதிய சட்டை வாங்கி தர முடியும் என்ற நிலையில் விக்ராந்த் காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் மீது திருட்டுப்பழி விழுகிறது. போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். கணவனை காணவில்லையே என்று ரித்விகா இரவு முழுவதும் தேடுகிறார் அடுத்து நடந்தது என்ன என்பதை எதார்த்த கிளைமாக்ஸ் உடன் சொல்கிறது தீபாவளி போனஸ் படம்
விக்ராந்தை ஹீரோவாக வில்லனாக படங்களில் பார்த்திருந்தாலும் கஷ்டப்படும் ஒரு ஏழை வாலிபனாக முதல் முறையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக ரித்திகா நடித்துள்ளார் மகனாக ஹரிஷ் நடித்திருக்கிறார்.
இவர்கள் மூன்று பேரை சுற்றித்தான் கதை முழுவதும் செல்கிறது. போதிய வருமானம் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் தீபாவளிக்கு கூட புது சட்டை வாங்க முடியாத சூழல் நிலவும் அனுபவத்தை அனுபவித்தவருக்குத்தான் இப்படத்தில் வரும் காட்சிகளின் கஷ்டமும் வேதனையும் புரியும். அந்தக் கஷ்டத்தையும் வேதனையையும் விக்ராந்த்தும் ரித்விகாவும் நன்றாகவே புரிந்து நடித்திருக்கிறார்கள்.
விக்ராந்த் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற உணர்வு ஏற்படும் வகையில் காட்சியை அமைத்திருப்பது விறுவிறுவென் நிமிடங்களை நகர்த்துகிறது.
ரித்விகா எளிமையாக அழகாக, அளவுடன் நடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸ்சில் விக்ராந்த் ரித்விகா குழந்தையுடன் தியேட்டர் சென்று விஜய் படத்தை பார்த்து ரசிப்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் ஆக இருக்கும்.
குதிரைக்கு லாடம் கட்டியது போல் ஒரு இலக்கை நோக்கி மட்டுமே கதை நகர்கிறது. ஒரு குறும்படத்திற்கான கதைதான் . அதை ஒன்றரை மணி நேர படமாக இயக்கியிருக்கிறார் ஜெயபால்.
மரியா ஜெரால்டு இசை, மதுரை கடைவீதியில் சுசுற்றிக்டிக்காட்டும் ஒளிப்பதிவாளர் கௌதம் சேதுராம் கேமரா இரண்டும் ஜோடி போட்டு பயணித்திருக்கிறது.
தீபாவளி போனஸ் – பட்ஜெட்டில.

