Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கோழிப்பண்ணை செல்லதுரை (பட விமர்சனம்)

படம்: கோழிப்பண்ணை செல்லதுரை

நடிப்பு: ஏகன், யோகி பாபு, பிரிகிடா சாகா, சத்தியதேவி, ஐஸ்வர்யா தத்தா,   லியோ சிவகுமார், நவீன்

தயாரிப்பு: டாக்டர் அருளானந்த், மேத்திவோ அருளானந்த்

இசை: என் ஆர் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: அசோக் ராஜ்

இயக்கம்: சீனு ராமசாமி

பிஆர்ஓ: நிகில் முருகன்

சிறுவயதில் தாய் தந்தையால் அனாதையாக விடப்படும் அண்ணன் தங்கை இருவரையும் அரவணைத்து வளர்க்கிறார் கோழிப்பண்ணை வைத்திருக்கும்  யோகி பாபு. அண்ணன் ஏகன் தங்கை சத்திய தேவி மீது உயிரையே வைத்திருக்கிறார். அவருக்காக எதையும் செய்ய துணிகிறார். தங்கையும் அதே போல் அண்ணன் மீது பாசத்தை பொழிகிறார். ஒரு கட்டத்தில் சத்தியதேவி  ஒருவரை காதலிக்க அதை அறிந்து ஏகன் கோபப்பட்டு காதலனை  வெட்ட அரிவாளுடன் துரத்துகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.

ஒரு வரியில் இந்த கதையை கேட்பதற்கு அண்ணன் தங்கை பாசம் என்று  தோன்றும் ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கையின் அர்த்தத்தை காட்சிக்கு காட்சி போதித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

புதுமுக ஹீரோவாக நடித்திருக்கும் ஏகன்  அண்ணன் கதாபாத் திரத்தில்  யார் சாயலும் இல்லாமல் தன் சாயலில் நடித்து  எதார்த்த அண்ணனாக மனதில் பதிகிறார். அதற்கு அவரது நிறமும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைகிறது. கருப்பா இருக்கிறவன் பாசக்காரன்  அதேசமயம் கோபக்காரன் என்பதை ஏகன் பாத்திரம் நிரூபிக்கிறது

ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்திய தேவி அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலை கைவிட துணிவது வலு. அவரது நடிப்பும்  எதார்த்தம்  மீறாமல் இருக்கிறது.

ஏகனை காதலிக்கும் சட்டி. பானை கடைக்காரராக வரும் பிரிகிடா பாவாடை சட்டையில். கண்களை கவர்கிறார். காதல் வழிய வழிய பேசி கிக் ஏற்றுகிறார்.

கோழிப்பண்ணை ஓனராக வரும் யோகி பாபு குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். தனது காமெடி வசனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கண்ணியமான வசனங்கள் பேசி கவர்கிறார்.

இயக்குனர் சீனு ராமசாமி தனது எல்லா படங்களிலும் வாழ்க்கை யின் முக்கியத்துவத்தை  உணர்த்தும் கதைகளையே சொல்லி இருக்கிறார். இந்தப் படத்திலும் அந்த பணியை செவ்வனே செய்து முடித்திருக்கி றார். இவ்வளவு இயல்பாக எதார்த்தமாக குடும்ப உறவு களையும் மன்னிக்கும் மனப்பான் மையும் மனதுக்குள் பதிய வைக்க இவர் ஒருவரால் மட்டுமே முடியும். பாதை மாறாமல் சீனு ராமசாமி யின் பயணம் தொடர  பெரிய வாழ்த்துக்கள்.

அசோக் ராஜ் ஒளிப்பதிவு  வண்ணங்களை பூசாமல் பக்கத்தில் வீட்டில் நடக்கும் சம்பவத்தை காணும் காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார்.

என் ஆர் ரகுநந்தன் இசையில் மெலடிகள் இனிதே பாய்கிறது.

கோழி பண்ணை செல்லதுரை- குடும்ப காப்பாளன்.

 

 

 

 

 

Related posts

டொரண்டோவில் இருந்து வந்த பாடகி விதுசாயினி

Jai Chandran

கிராம சபை கூட்டம் நடத்த வலியுறுத்தி கமல் ஹாசன் ஆட்சியரிடம் மனு

Jai Chandran

MUFASA: THE LION KING TAMIL VOICE TALENTS PRESS MEET

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend