Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ARM (மலையாளம் தமிழ் டப்பிங்) பட விமர்சனம்

படம்: ARM (மலையாளம் தமிழ் டப்பிங்)

நடிப்பு: டொவினோ தாமஸ். (இரு வேடம்), ஐஸ்வர்யா ராஜேஷ், கிருத்தி  ஷெட்டி , பசில் ஜோசப், சுரபி லட்சுமி

தயாரிப்பு: லிஸ்டின் ஸ்டீபன், சகரியா தாமஸ்

இசை: திபு நினன் தாமஸ்

ஒளிப்பதிவு: ஜோமன் டி ஜான்

இயக்கம்: ஜித்தின் லால்

வெளியீடு: பைவ் ஸ்டார் செந்தில் (தமிழ்நாடு)

பி ஆர் ஓ: சதீஷ்

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு கேரள பகுதியில் அரசன் ஒருவன் ஆண்டு வருகிறான். அவனது முக்கிய மந்திரியை ஒரு அடாவடி கொடுமைக்காரன் கடத்தி வைத்து கொல்ல முயல்கிறான். அப்போது அங்கு வரும் மின்னல் வேகத் திருடன்  மணியன்  (டொவினோ தாமஸ்) கொடுமை காரனை கொன்று மந்திரியை  காப்பாற்றுகிறான். மணியனின் வீரத்தை பாராட்டும் மன்னர்,  பரிசாக என்ன வேண்டும் என்று கேட்க அவனோ விண்கல்லால் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த பாவை விளக்கு வேண்டுமென்று கேட்கிறான். அதை மன்னர் அவனுக்கு அளிக்க அதை தன் கிராமத்துக்கு கொண்டு வருகி றான்  அடுத்த தலைமுறையில் மன்னர் வாரிசு ஒருவன் கிராமத்தில் இருக்கும் பாவை விளக்கு போலியானது நிஜமான விளக்கை கண்டுபிடித்து தரும்படி மணியனின்ன் பேரன்  அஜயனிடம் மிரட்டி கேட்கிறான்.  அந்த மிரட்ட லுக்கு அஜயன் பணிந்தானா , ஒரிஜினல் பாவை விளக்கு என்னவானது என்ற கேள்விக ளுக்கு கிளைமாக்ஸ் அதிரடி பதிலளிக்கிறது.

வடக்கு கேரளாவில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப். பட்டிருக்கிறது. கதை என்னமோ தொலைந்து விடும் பாவை விளக்கை கண்டுபிடிப்பது என்ற ஒற்றை வரி தான். ஆனால் அதை திரைக்கதை மூலம் சொல்லி இருக்கும் விதமும் அதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள், பிரம்மாண்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரசிகர்களை படத்தோடு ஒன்று வைத்து விடுகிறது.

மணியன், அஜயன் என தாத்தா,  பேரனாக இரட்டை வேடங்களில் டொவினோ தாமஸ் நடித்திருக் கிறார். தாத்தா என்றால் இந்தியன் தாத்தா போல் வயசான தாத்தா கிடையாது கட்டுமஸ்தான உடல் கட்டுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஓடிச் செல்லும் மின்னல் திருடன் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் மிரள விடுகிறார்.

ஆயுதங்களுடன் பாய்ந்து வரும் கூட்டத்தை புயலாக பாய்ந்து அடித்து நொறுக்கும் டொவினோ தாமஸின் வேகம் கருவிழிகளை சுழல விடுகிறது. அதேபோல் அஜயன்  கதாபாத்திரத்திலும் மாறுபட்ட நடிப்பை வழங்கி இருவரும் வெவ்வேறு ஆளோ என்று எண்ண வைக்கிறார் டொவினோ தாமஸ்.

கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்திருக்கிறார். டொவினோவை தந்தைக்கு தெரியாமல் காதலிக்கும் கதாபாத்திரம்..  மறைந்து மறைந்து அழகாக காதலிக்கிறார்.

வாரியர் என்ற படத்தில் விசில் மகாலட்சுமி ஆக நடித்த கிருத்தி  அதில்  செம ஆட்டம் போட்டு அசத்தியிருப்பார். ஆனால்  அவரது ஆட்டத்தை இப்படத்தில் இயக்குனர் ஏனோ மிஸ் செய்தி ருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ரோகினி டொவினோ தாமசின் தாயாக நடித்துள்ளார்.

ஜித்தின் லால் படத்தை வரலாற்றுக் கால கட்ட  கதையாக இயக்கினாலும் விறுவிறுப்பு குன்றாமல் இயக்கியிருக்கிறார். அவருக்கு பெரிதும் கைகொடுத் திருப்பது ஆக்சன் காட்சிகளும், அற்புதமான கிராபிக்ஸ் வி எஃப் எக்ஸ் காட்சிகளும் தான்.

படத்திற்கு இன்னொரு தூணாக நிற்பது திபு நினன் தாமசின் இசை.  செண்டை மேளம் கிழியும் அளவிற்கு பீய்த்து உதறி இருக்கிறார்.

ARM – ஆக்சன் மற்றும் கிராபிக்ஸ் அமர்க்களம்.

 

 

 

:

Related posts

உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்..

Jai Chandran

Prabhas25 Something big coming tomorrow

Jai Chandran

Akhanda 2: Thandavam Release On September 25th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend