Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஜெயம் ரவி திடீர் விவாகரத்து: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடி தம்பதிகளுக்கு சமீபகால மாக நேரம் சரியில்லை என்று தோன்றுகிறது.  காதலித்து  திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து  பெற்று பிரிந்தார்கள். அதேபோல் நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா  இருவரும் விவாகரத்து  பெற்று பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு நடிகரும் இசைய மைப்பாளருமான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி  சைந்தவி  ஜோடி திடீரென்று விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த சலசலப்புகள் ஓய்வதற்கு முன்பு தற்போது மற்றொரு நட்சத்திர நடிகர் விவாகரத்தை அறிவித்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் ஜெயம் ரவி.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்தார் ரவி . ஆரத்தி பிரபல பட தயாரிப் பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். தயாரிப்பாளர் சுஜாதா ஜெயம் ரவி நடித்த அடங்கமறு என்ற படத்தை தயாரித்திருக் கிறார்.
ஜெயம் ரவி , ஆரத்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவி மகனாகவே நடித்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவி ஆரத்தி இருவருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் கடந்து சில மாதங்களாகவே கிசுகிசுக்கள் பரவி வந்தன. ஆனால் அது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது மனைவி ஆரத்தி யை.  பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்பு களுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமை யையும், எனக்கு நெருக்கமானவர் களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷய மாகவே இருக்க வேண்டும் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி. இவ்வாறு அறிக்கையில் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Related posts

செய்தி துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த தயாரிப்பாளர் ஜெயமுருகன்

Jai Chandran

ஏஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

After Rewind, Actor Tej’s next in Tamil is “God”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend