Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலைஞர் நாணயம்: தயாரிப்பாளர் சங்கம் பாராட்டு

கலைஞர் நாணயம்  வெளியிடும் மத்திய, மாநில அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி  வெளியிட்டுள்ள அறிக்கை:
பராசக்தி படம் மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பதிவு செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக சூரியன் போல் இரவும் பகலும் உழைத்தவர்.

திரைப்படங்களில் தனது வசனத் தால் மக்களிடம் நல்ல மாற்றங் களை கொண்டு வந்தவர் கலைஞர்.

நாணயத்தின் இருபுறம் போல் திரைப்படத்தையும், ஆட்சியையும் நன்கு கவனித்து பேணி காத்தவர் கலைஞர்.

கதையால், திரைக்கதையால், வசனத்தால், பாடலால், கடிதத்தால், ஆட்சியால் மக்களுக்காக பணி புரிந்தவர் டாக்டர் கலைஞர்.

நாடு போற்றிய அறிஞரான , கலைஞர் அவர்கள் தமது ஆட்சி காலத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி திரைத்துறையை தாங்கி பிடித்தவர்.

அவருடைய புகழில் இன்னொரு மைல்கல்லாக 18.08. 2024ல் மத்திய அரசு நாணயம் வெளியிடுகிறது. அதை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்சிங் அவர்கள் சென்னையில் வெளியிடுகிறார். இதற்காக மத்திய அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்,
விளையாட்டு துறை அமைச்சர் ,
உதயநிதி ஸ்டாலின்
அவர்களுக்கும் , இதற்கு உறுதுணையாக இருந்த பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும்
தமிழ்நாடு அரசுக்கும்
தமிழ்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு  என். இராமசாமி கூறியுள்ளார்.

Related posts

ஹபீபி பட பாடலை வெளியிட்ட தமிழக முதல்வர்

Jai Chandran

மருத்துவமனையிலிருந்து வடிவவேலு விரைவில் வீடு திரும்புகிறார்

Jai Chandran

Allu Arjun introduces India’s First LED Projection..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend