படம்: மழை பிடிக்காத மனிதன்
நடிப்பு: விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், சரண்யா, தனஞ்சய் முரளி ஷர்மா, ப்ரித்வி அம்பர் பலர்
தயாரிப்பு: கமல் போரா, பங்கஜ் போரா
இசை: அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்
இயக்கம்: விஜய் மில்டன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
அடிபட்ட நிலையில் இருக்கும் விஜய் ஆண்டனியை சரத்குமார் அந்தமானில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கிறார். “நீ யார் என்பது இங்கு இருப்பவர்களுக்கு தெரியக் கூடாது, யாரிடமும் பேசக்கூடாது, பழகக் கூடாது” என்று கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு விட்டு செல்கிறார். ஆனாலும் உணவு விடுதி வைத்திருக்கும் சரண்யா குடும்பத்திடம் அன்பாக பழகுகி றார். இதற்கிடையில் அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தாதா ஒருவரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. இதில் மேகா ஆகாஷின் குடும்பம் பாதிக்கிறது. உதவுவதற்கு யாருமே இல்லாமல் தங்கையுடன் தவிக்கும் மேகா ஆகாசுக்கு விஜய் ஆண்டனி உதவ முடிவு செய்கிறார். பலம் வாய்ந்த வட்டி தாதாவை எதிர்த்து நிற்கிறார். இதற்கிடை யில் போலீசும் விஜய் ஆண்டனியை ஒரு பக்கம் வலை வீசி தேடுகிறது. இரு தலை கொல்லி எறும்பாக சிக்கி கொணட விஜய் ஆண்டனி எடுக்கும் முடிவு என்ன? கடைசியில் அவரது கதி என்னவா கிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
விஜயகாந்தை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணத்துடன் இந்த ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பனையாகவே முடிந்து விட்டாலும் கேப்டன் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அவர் என்ன வேடம் ஏற்றிருக்கிறார் என்பது படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதேபோல் சரத்குமாரும் ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார் அதையும் படத்திலேயே பார்த்துக் கொள்ளுங்கள்.
விஜய் ஆண்டனி யார் என்பது படத்தின் தொடக்கத்தில் ஒரு நிமிட கார்ட்டூன் காட்சியில் வசனங் களால் சொல்லப்படுகிறது அதை எத்தனை பேர் கவனிப்பார்கள் என்று தெரியாது அது தெரிந்தால் அவர் எதற்காக அந்தமான் வந்தார் என்பதும் ரசிகர்களுக்கு புரிந்துவிடும் அதன் பிறகு கதைக்கு எதற்கு சஸ்பென்ஸ் என்று கேட்கிறீர்களா இயக்குனர் அப்படித்தான் எண்ணி ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறார் ஆனால் யார் கை வண்ணமோ சில மாறுதல்கள் செய்யப்பட்டு விட்டதாக இயக்குனர் விஜய் மிலிட்டனையே புலம்பும் நிலைக்கு தவிக்க விட்டு இருக்கிறார்கள்.
சரி படத்தைப் பற்றி பார்ப்போம்… விஜய் ஆண்டனி வழக்கமான ஆக்ஷன் காட்சிகளிலிருந்து மாறுபட்டு வேகமாக ரிஸ்க் எடுத்து அந்தர் செய்திருக்கிறார். சண்டைக்காட்சி ஒவ்வொன்றும் தெறிக்க விடுவது போல் படமாக்கப்பட்டிருக்கிறது.
என்ன ஒரு வருத்தம் என்றால் அவருக்கு ஜோடி இல்லையே அவருடன் டூயட் கூட பாடவில்லை என்ற ஒரு வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்யும்..
மேகா ஆகாஷ் விஜய் ஆண்டனிக்கு ஜோடி இல்லை ஆனால் அவருக்காக ஒரு காதலியின் குடும்பத்துக்கு என்னவெல்லாம் ஒரு காதலன் செய்வானோ அதை எல்லாம் செய்து முடிக்கிறார் விஜய்.
சத்யராஜ் , சரத்குமாரும் ரகசிய கோட் வேர்ட் பகிர்ந்து கொண்டு விஜயகாந்த் ரேஞ்சுக்கு தேசபக்தி வசனம் பேசுகிறார்கள். ஆனால் அது எதற்காக என்பதுதான் புரியவில்லை.
இரண்டாவது நாயனாக வரும் ப்ரித்வி, மேகா ஆகாஷ் காதலுக்காக வழிந்து வழிந்து நிற்பதும் ஓடுவதுமாக தமாஷ் செய்து இருக்கிறார்.
வட்டி வசூலிக்கும் வில்லனாக தனஞ்செய். நடித்துள்ளார். விஜய் ஆண்டனி உடன் அவர் மோதும் காட்சி பரபரப்பு.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் முரளி ஷர்மா அவ்வப்போது காமெடி வெடி கொளுத்தி போடுகிறார்.
கமல் போரா, பங்கஜ் போரா படத்தை தயாரித்திருக்கின்றனர்
அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி இசை அமைத்திருக் கிறார்கள். ஆக்சன் காட்சிகளுக்கு பின்னணி இசை தடபுடலாக ஒலிக்கிறது.
படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் விஜய் மில்டன். எதையோ பிடிக்க போய் எதுவோ வந்தது என்பார்களே அதுபோல் இயக்குனர் விஜய் மில்டன் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாக்க போய் அது வேறொரு விதத்தில் ஆக்சன் கதையாக வந்திருக்கிறது. இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும் பெரிய குறை சொல்வதற்கில்லை.
மழை பிடிக்காத மனிதன் – டைட்டில் கவித்துவாக இருந்தாலும் இது அதிரடி ஆக்சன் படம்.

