Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாணவ, மாணவிக்கு விஜய் ஊக்க தொகை சான்று வழங்கும் விழா

2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் ஊக்கத்தொகையை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வழங்க உள்ளார். இது குறித்து அக்கழக பொதுச் செயலாளர்  என். ஆனந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்ட உள்ளார்

முதற்கட்டமாக 28/6/2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது இதில் அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு கன்னியாகுமரி, கரூர, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03.07  2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால்,,  மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர்,, திருவாரூர், திருப்பத்தூர்,  திருச்சி, வேலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்ட பெறுகிறார்கள்.

தளபதி விஜய் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில்  சான்றுகளும், ஊக்கதொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர்  என் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் பாலா வாழ்த்து

Jai Chandran

JettyTrailer Starring MaanyamKrishna

Jai Chandran

Makers of Prabhas Radhe Shyam,Take a Different Approach to Music

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend