Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரஷாந்த் பிறந்த நாள்: ரசிகர்கள் இலவச தலை கவசம் வழங்கி கொண்டாட்டம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அந்தகன்’. இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில்  தளபதி விஜய் நடிக்கும்  ‘கோட்’ திரைப் படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.விஜய்யுடன் பிரஷாந்த் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

இது தவிர புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.  பிரஷாந்த்துக்கு  நேற்று தனது பிறந்ததினம். தனது பிறந்த நாளை செண்ணையில் உள்ள பிரஷாந்த் கோல்ட் டவரில்  ரசிகர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் கொண் டாடினார். இந்த நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்துக் கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த், “நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர் களுக்கு வணக்கம். எனது ஒவ்வொரு பிறந்தநாளன்று நான் காலம்காலமாக செய்வது, முதலில் என் பெற்றோரிடம் ஆசி பெறுவேன், பிறகு கோவிலுக்கு செல்வேன். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அதுபோல் தான் இந்த வருட பிறந்தநாளும் அமைந்திருக் கிறது.

என் பிறந்தநாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணி களை செய்து வருகிறார்கள். ஆனால், இந்த வருடம் அவர்கள் பலருக்கு இலவசமாக தலைக்க வசம் வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இந்த நற்பணியை செய்தவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியி ருக்கிறார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு. பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது. அதேபோல் நிறைய தண்ணீர் குடிங்க, பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்க, ஓட்டு மிகவும் முக்கியம் .பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு பிரஷாந்த் பேசினார்.

நிகழ்வில் நடிகர் தியாகராஜன் கலந்து கொண்டு மகனுக்கு வாழ்த்து கூறியதுடன் வரவேற்று பேசினார். பி ஆர் ஓ டைமண்ட் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Related posts

10 ஹவர்ஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது..

Jai Chandran

Actor Karthi’s 25th film ‘Japan’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend