Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க ( பட விமர்சனம்)

படம் ஜோஷ்வா இமைபோல் காக்க

நடிப்பு: வருண், ராஹி, கிட்டி

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ்

ஒளிப்பதிவு எஸ். ஆர். கதிர்

இசை: கார்த்திக்

இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா ( D ‘ One)

சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் சமீர் கைதாகிறான். அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் அதற்கான சாட்சியங் களை கூலிப்படை  வைத்து அழிக்க சிறையிலிருந்து திட்டமிடு கிறான். குந்தவை ( ராஹி)
மற்றும் அவரது கூட்டம் சமீருக்கு எதிராக சாட்சிகளை திரட்டி கோர்ட்டில் ஒப்படைக்க முயல் கிறது. அவர்களை கூலிப்படை தடுத்து நடுவழியில் சுட்டுக் கொல்கிறது. இதில் குந்தவை மட்டும் தப்பிக்கிறார். குந்தவையை பாதுகாத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பொறுப்பை ஜோஷ்வா ( வருண்) ஏற்கிறான். இதற்கிடையில் ஜோஷ்வா மற்றும் குந்தவையை கொல்வதற்கு பல்வேறு கூலிப்படைகள் அவர்களை சுற்றி வளைக் கின்றன. அவர்களை எல்லாம் எதிர்த்து ஜோஷ்வா குந்தவையை கோர்ட்டில் ஆயர்படுத்தினானா இல்லையா ?அல்லது குந்தவை கொல்லப்படுகிறாளா?  குந்தவையை கொல்வதற்கு திட்டம் போடும் சதிகாரக் கூட்டம் எது? என்பதற்கு ஜோஷ்வா  ஹாலிவுட் பாணியில் பதிலளிக்கிறது.

சிம்பு நடித்த வெந்து  தணிந்தது காடு படத்துக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன்  ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு ஆக்சன் படத்தை ஜோஷ்வா பெயரில் இயக்கி அளித்திருக்கிறார்.

ஒரு சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த வருண் இப்படத்தில்  ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திரம் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற ஒரு திறமையான கூலிப்படை கொலைகாரன் என்பதால்  அதற்கு ஏற்ப தனது ஸ்டண்ட் திறமைகளை வெளிநாட்டில் பயிற்சி பெற்று வருண் கற்றுக் கொண்டிருப்பதால் சண்டைக் காட்சிகளில் வியக்க வைக்கிறார்.அவர் செய்வது கராத்தே வா, குங்பூ வா, கிக் பாக்சிங்கா  என்று தெரியாமல் எல்லாம் கலந்த ஒரு மசாலா மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை காட்சி போல் இருக்கிறது.

கவுதம் மேனன் படம் என்றாலே  பெரிதாக ஆக்ஷ்ன் காட்சியை எதிர்பார்க்கமாட்டார்கள்,  .வித்தியாசமான காதலைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால்   ஜோஷ்வா படமோ 10% காதல், 90% ஆக்ஷன்.

ஒன்றிரண்டு சீன் காதல் காட்சி வந்தால் மற்ற பத்து காட்சிகள் ஆகஷன் என்றுதான் படம் நகர்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் பட கதாநாயகிகள் எதார்த்த முகத்துடன் தான் இருப்பார்கள் . அப்படித்தான் ராஹி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தளவுக்கு காதல் பாவனை போதும், இந்த அளவுக்கு ஹீரோவுடன் நெருக்கம் போதும் என்று மில்லி மீட்டர் கணக்கில் அளந்து கொடுத்திருப்பதால் அதற்கு மேல் வருண் ராஹி ஜோடி எல்லை மீறாமல் நடித்திருக் கின்றனர். ஆனால் முத்தக் காட்சிகளில் பச்சக் பச்சக் இல்லாமல் இல்லை.

விஜயகாந்த் காலத்து வில்லன் கிட்டி யார் என்பதை இந்த கால இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.  அவரை தேடிப்பிடித்து இப்படத்தில் வில்லனாக்கி இருக்கிறார் இயக்குனர். அதே மொட்டை தோற்றம்தான் கிட்டிக்கு. ஆனால். முகத்திலோ, நடிப்பிலோ  தளர்வு இல்லை.

ஹீரோவாக நடித்துக் கொண்டி ருந்த கிருஷ்ணா  மற்றொரு வில்லனாக வருகிறார். அவருக்கும் ஆக்ஷன்  காட்சிகளில் பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதால் உருண்டு புரண்டு சண்டை செய்கிறார்.

டி வி புகழ் டிடி டான் போன்று வேடம் ஏற்றிருக்கிறார். ஆளுக்கும் கதாபாத்திரத்திற்கும் எந்த தொடர்புமில்லை. திட்டம் மட்டும் போட்டு கொடுக்கிறார். ஒரே அடியில் மயங்கி விழுந்து விடுகிறார்.  அவ்வளவுதான் டிடியின் வேலை.

.கூட்டத்தில் கும்மி அடிப்பது போல் ஆக்ஷன் காட்சிகளில் துப்பாக்கி களை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளிக் கொள்கிறார்கள். எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள், எத்தனை பேர் தப்பிக்கிறார்கள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ஆக்ஷன் காட்சிகள் பெரும்பாலும் சென்னையிலேயே படமாக்கப் பட்டிருக்கிறது .

துப்பாக்கி சத்தம் கேட்டாலும் சரி, வெடிச் சத்தம் கேட்டாலும் சரி எந்த போலீசும் தலை காட்ட வில்லை. ஒருவேளை போலீஸ் இலாகாவே லீவு எடுத்து சென்று விட்டதோ என்று என்ன தோன்றுகிறது.

கௌதம் மேனன் படத்தில் ஆக்சன் காட்சி புதுமை தான் அதற்காக போலீஸ் வாசனையே இல்லாத ஒரு ஆக்சன் காட்சி என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுவும் இந்த காலகட்டத்தில எல்லா இடத்திலும் போலீஸ் பந்தோபஸ்த்து, நைட் பேட்ரோல் என போலீஸ் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
இதில் போலீஸ் பற்றியே இயக்குனர் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன் என்று தான் புரியவில்லை.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் படத்தை தயாரித்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆக்சன் படம் என்றால் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த திருப்தி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் இப்படத்தை அவர் அமைத்திருக்கிறார். பட காட்சி களும் அதன் நேர்த்தியிலும் ஹாலிவுட் தரம் தெரிகிறது. ஆனால் போலீஸ் இல்லாத ஒரு ஹாலிவுட் படம் கூட இருந்ததாக தெரியவில்லை. கிளைமாக்ஸ் முற்றிலுமாக முடியாமல் தொக்கி நிற்பது இரண்டாம் பாகத்துக்கு  இன்ட்டா அல்லது புட்டேஜ் லெந்த் ப்ரப்ளமா  தெரியவில்லை.

எஸ். ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சலவைக்கு போய்விட்டு வந்த பட்டு போல் காட்சிகள் பளபளக்கிறது.

கௌதம் மேனன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத குறையை இசையமைப்பாளர் கார்த்திக் தீர்த்து வைத்திருக்கி றார். பாடல்கள் அரங்கில் சரவுண்டிங் சவுண்டில் காதில் பாயும் போது தானாக கைகளும் கால்களும் தாளமிடுகின்றன.

ஜோஸ்வா இமை போல் காக்க – கண்ணன் மூடிக்கொண்டு பார்க்கும் ஆக்ஷன் பிரியர்களுக்கு.

 

Related posts

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்கும் ஆஷா படப்பிடிப்பு

Jai Chandran

சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் மானேஜர் அன்புராஜா திருமணம்

Jai Chandran

வெற்றி துரைசாமி வெற்றிமாறன் ஆய்வகம் அஞ்சலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend