Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ 540 கோடியில் பிரமாண்ட திரைப்பட நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரூ.540 கோடி மதிப்பில் பிரமாண்ட மான நவீன திரைப்பட நகரம் பூந்தமல்லியில் அமைய உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ‘கலைஞர் 100’ விழாவில் அறிவித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர்,  தி முக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நேற்று (ஜனவரி 6ம் தேதி 2024)நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு முதல அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள்,தயாரிப்பாளர்கள், இயக்குநாரகள், தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அப்பா, அம்மா வைத்த பெயரை மறந்து விடும் அளவிற்கு தமிழ் நாடு கலைஞர் என்றுதான் உச்சரித்து இருக்கிறது.

வாழ்ந்த காலத்தைப் போலவே மறைந்த பின்னரும் நினைக்கக் கூடிய பெருமை மிக்கவர் அவர்தான். 2018–ம் ஆண்டு கருணாநிதி மறைவால் தமிழகமே கலங்கிப் போனது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறையினர் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தி பெருமை சேர்த் தார்கள். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

எழுத்து பேச்சால் ரசிகர்களின் உள்ளத்தில் குடியேறியவர் கருணாநிதி. அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினால் என்றால் அந்த படம் வெற்றி என்றே கருதப்படும்.
அவரது வசனத்தை கூறி நடிப்பு துறையினர் வாய்ப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப் பெரியது. கலை இனிமே என்னிடம் என்று வாழ்ந்த தலைவர் அவர். தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன அந்த வகையில். தற்போதைய தி.மு.க. ஆட்சியும் தொடர்கிறது.
இந்த விழா மேடையிலேயே புதிய திட்டங்களை நான் அறிவிக்கி றேன். எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி ரூ.5 கோடி செலவில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப் பட உள்ளது.


அதேபோல கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நவீன திரைப்பட நகரில் வி.எப்.எஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதி களும் அமைக்கப்பட இருக்கிறது. முதல்-அமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி னாக அனைவருக்கும் நன்றி . இவ்வாறு முதல்வர் மூ.க.ஸ்டாலின் பேசினார்

Related posts

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு ஃபிலிம்சேம்பர் வாழ்த்து

Jai Chandran

Thalli Pogathey FromTomorrow

Jai Chandran

அப்பாவை ஏமாற்றி.படம் தயாரித்த இயக்குனர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend