Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஃபைட் கிளப் (பட விமர்சனம்)

படம்:  ஃபைட் கிளப்

நடிப்பு:  உறியடி விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சண்முகம், சங்கர் தாஸ்,  அவினாஷ் ரகுதேவன் , சரவணவேல், வடசென்னை அன்பு, ஜெயராஜ், சாட்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மாச்சல், ராகுல் குண சேகரன், சி.சந்தோஷ்கர், அரசன், மோகன கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின்

தயாரிப்பு:ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

இயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத்

படம் வழங்குவது: லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட்

ரிலீஸ்: சக்தி.பிலிம் ஃபேக்டரி

பி ஆர் ஒ : யுவராஜ்

வட சென்னை பின்னணியில் உருவாகியிருக்கிறது ஃபைட் கிளப்.

உடன்பிறந்த அண்ணன் தம்பியில் அண்ணன் பெஞ்சமின் ( கார்த்தி கேயன் சண்முகம் ) தன் பகுதி இளைஞர்களை கால்பந்தாட்ட வீரர்கள் ஆக்க பயிற்சி அளிக்கி றார். தம்பி ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்) போதைப்பொருள் பிஸ்னஸ் செய்ய எண்ணுகிறார். அதை தடுத்து நிறுத்துகிறார் பெஞ்சமின். ஆத்திரம் அடைந்த ஜோசப் கூட்டாளி கிருபாவுடன் (சங்கரதாஸ்)  சேர்ந்து பெஞ்சமி னை கொல்கிறார்.  இதில் உஷாராகும் கிருபா நைசாக ஜோசப்பிடம் பேசி சிறைக்கு அனுப்பி விட்டு கட்சியில் சேர்ந்து  அரசியல்வாதியாகிறார். சிறையி லிருந்து வரும்  ஜோசப் தன்னை ஏமாற்றி சிறைக்கு அனுப்பிய  கிருபாவை பழிவாங்க முடிவு செய்கிறார். அரசியல்வாதியான கிருபாவை நெருங்க முடியாததால் அப்பகுதியில் தன் அண்ணன் மீது.மரியாதை வைத்திருக்கும் செல்வா (விஜயகுமார்) மற்றும் நண்பர்களிடம் உருக்கமாக பேசி தன் வலையில் வீழ்த்துகிறார். அவர்களுக்கு போதை ஏற்றி கிருபாதான் பெஞ்சமினை கொன்றது என்று சொல்லி அவனை தீர்த்துக்கட்ட உசுப்பி விடுகிறார். இது இருதரப்பு ரவுடி  கேங் மோதலாகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜோசப்பின் சதியை செல்வா தெரிந்து கொள்ள அடுத்து நடக்கும் பயங்கரம் ஈகோ மோத. லுக்கு.முடிவுரை எழுதுகிறது.

உறியடி விஜயகுமார் வடசென்னை  இளைஞனாக செல்வா என்ற கதாபாத்திரத்தில் முற்றிலுமாக உருமாறியிருக் கிறார் .  சிக்ஸ்பேக் தோற்றம் அவரது கதாபாத்திரத்துக்கு மெருகு சேர்க்கிறது.

கால்பந்தாட்ட வீரர்களாக ஆவதற்கு  விஜயகுமாரும் நண்பர்களும் முயன்று கொண்டி ருக்கும்போது அவர்களுக்கு நடுவே சகுனியாக நுழையும் அவினாஷ் .மெல்ல மெல்ல அவர்களை தன் பழி உணர்வை தீர்த்துக் கொள்ள  வஞ்சக வலை விரிப்பதும்  அது தெரியாமல் விஜயகுமார் ரவுடியாகவே மாறி கிருபாவின் ஆட்களை.புரட்டி எடுப்பது முதல் இந்த கேங் வார் தொடங்கி விடுகிறது. பெட்ரோலில் பற்றிய தீயாக  விஜயகுமாரும் அவரது  நண்பர்களும் வஞ்சம் தீர்க்க தகிப்பது அரங்கை டென்ஷன் கிடங்காக்குகிறது.

இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக பள்ளியில் நாயகி மோனிஷா வுடன் காதல் சிறகடித்து இளவட்ட விளையாட்டு விளையாடுகிறார் விஜயகுமார். மீண்டும் இருகோஷ்டிக்குமான ஃபைட். கிளப் , அதான் அடிதடி குத்து வெட்டு  மோதல் ஜிவ்வென்று பறக்க தொடங்கி விடுகிறது.  கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு சென்று கிருபா, ஜோசப் இருவரை யும் விஜயகுமார்  பழி வாங்குவது மண்டைக்குள் ஜே சி பியை ஓட்ட வைக்கும் எஃபெக்ட் தருகிறது.

படத்தில் நடித்திருக்கும் மற்ற எல்லா பாத்திரங்களும் அதன் அப்பட்ட வடிவங்களை பிரதிபலிக் கிறது. கிருபா, ஜோசப் பாத்திரங் கள் கதையின் அண்டர்கரண்ட் ஆக்ஷனுக்கு அச்சாணி.

படத்தில் விஜயகுமார் உள்ளிட்ட. மற்ற பெரும்பாலான பாத்திரங்கள் சிகரெட்,. கஞ்சா புகைப்பதும்  தண்ணியடிப்பதையும்  ரொம்பவே தவிர்த்திருக்கலாம்.

படத்தில்.இவ்வளவு  வன்முறை தேவையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே  ஃபைட் கிளப் என்று டைட்டிலை வைத்திருப்பது போல் தெரிகிறது.

:ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா படத்தை தயாரித்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும், ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவும் இசை கருவிகளையும், கேமிராவையும் தூக்கிக் கொண்டு இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹமத்தின்  திரை கதை வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடியிருக்கிறார்கள்.

எடிட்டர் கிருபாகரணின் நான்லீனியர் எடிட்டிங் கிளைமாக்சை தொடக்க காட்சி யாகவும் தொடக்க காட்சியை கிளைமாக்ஸ் காட்சியாகவும் புரட்டி.போட்டு மாயாஜாலம் செய்திருக்கிறது..

:இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட்  வழங்க  சக்தி.பிலிம் பேக்டரி படத்தை  வெளியிட்டுள்ளது

ஃபைட் கிளப் ஈகோவின் இரத்தக் குளியல்.

Related posts

விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

The lyric video of OyaadhaAlaiPoley from Mughizh releases at 4 PM Today

Jai Chandran

இசை- பாடல் அமைத்து நடிகர் மன்சூர் அலிகான் வெளியிடும் ஆல்பம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend