Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரன்பிர்- ராஷ்மிகா அனிமல் பட டிக்கெட் முன்பதிவு வேகம்

‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான ‘அனிமல்’ திரைப்படத் தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந் ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்ப தால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்தி ருக்கிறார்கள்.

இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோக மான வரவேற்பே இந்த உற்சாகத் திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான ‘அனிமல்’ எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங் களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.

 

மிகச் சில இந்திய திரைப்படங் களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். ‘அனிமல்’ திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து ‘அனிமல்’ திரைப்படத்தை தயாரித்திருக்கி றார்கள். கிரைம் டிராமா ஜானரி லான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதி யளிக்கிறது.‌

 

Related posts

வளர்ப்பு மகள் பற்றி நடிகர் ராஜ்கிரண் திடீர் அறிக்கை

Jai Chandran

மழை பிடிக்காத மனிதன் (பட விமர்சனம்)

Jai Chandran

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend