Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்ஷன் கமர்ஷியலுடன் “ரெய்ட்” படம்: விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி யுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது: இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்  பாக வசனம் எழுதியுள் ளார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாள ருக்கு லாபம் தரக்கூடிய தாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கி றேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரைய ரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.

எடிட்டர் மணிமாறன். பேசியதாவது:  என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் தயாரிப் பாளருக்கும் இயக்குந ருக்கும் நன்றி. படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்.

ஒளிப்பதிவாளர் கதிரவன் பேசியதாவது:

இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில் நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண் டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித் துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் பேசியதாவது:

கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்‌ஷன் விஷயங் களை இதில் கொடுத்துள் ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாக செய்துள் ளார். இயக்குநர் முதல் படத்திற்காக கடினமான உழைப்பைக் கொடுத்துள் ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும்.

கலை இயக்குநர் வீரமணி கணேசன் கூறியதாவது: இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர்.

நடிகர் ரிஷி கூறியது: முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன்.

நடிகர் செளந்தரராஜன் கூறியதாவது:

நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்த போது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.

இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாவது:  இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலை ஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப் படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியான வரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும்.

நடிகர் கண்ணன் பொன்னையா கூறிய தாவது:  முத்தையா சாரின் வசனத்தில் நடித்தது எனக்கு பெருமை. இயக்குநர் கார்த்தி சின்ன பையனாக இருந்தாலும் சிறப்பாக வேலை பார்த் துள்ளார். சூர்யாவுக்கு ‘காக்க காக்க’ போல, விக்ரமுக்கு ‘சாமி’ போல, விக்ரம் பிரபுவுக்கு ‘ரெய்டு’ ஒரு பிராண்டாக அமையும்.

நடிகர் செல்வா கூறிய தாவது: வலிமை’ படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கி றேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங் கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டி வான விஷயங்கள் வரு கிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.

நடிகை அனந்திகா கூறியது:

இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்தி ருக்கிறது. படம் பார்த்து விட்டு சொல் லுங்கள்.

இயக்குநர் கார்த்தி கூறியது:

இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத் தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தா வுமான முத்தையா கூறியது:  கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்து விட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக் காரன்’ நல்ல ரீச் இருந்த போது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட். டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்”.

நடிகை ஸ்ரீதிவ்யா கூறியது: ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக் காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத் திரம் முத்தையா கொடுத் தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி.

நடிகர் விக்ரம் பிரபு கூறியது: நெகட்டிவிட்டி யை வைத்து தான் இந்தப் படம் உருவாக்கியுள் ளோம். நல்ல கதைகளை தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷிய லாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள் ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித் துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட் டுள்ளது. படத்தின் விஷூவலுக் காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள் ளார்.

Related posts

கட்சிக்காரன்’ (பட விமர்சனம்)

Jai Chandran

FIRSTLOOK & TEASER of JAGA

Jai Chandran

‘ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend