படம்: கபில் ரிட்டன்ஸ்
நடிப்பு: ஶ்ரீனி சவுந்தர்ராஜன், நிமிஷா, சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான் , சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி
தயாரிப்பு : தனலட்சுமி கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு : ஷியாம் ராஜ்
இசை : ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்
இயக்கம்: ஶ்ரீனி சவுந்தர்ராஜன்
பி ஆர் ஒ :வெங்கட்
ஐ டியில் வேலை பார்க்கும் தந்தை தன் மகன் இன்ஜினியராக வேண்டும் என்று எண்ணுகிறார். தாயோ டாக்டராக வேண்டும் என்றும் , தாத்தாவோ கலெக்டராக வேண்டும் என்று தங்கள் எண்ணத்தை அவன்.மீது திணிக் கின்றனர். ஆனால் பிள்ளைக்கோ கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்று ஆசை. இது தந்தைக்கு பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் மனம் மாறி தன் மகன் ஆசையை நிறை வேற்ற கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறார். கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்கு செல்ல அங்கு பவுலிங் சரியாக வீசவில்லை என்று ரிஜெக்ட் செய்யப்படுகிறான். . மகனுக்கு இன்னொரு சான்ஸ் தரும்படி கேட்க அது தேர்வாளரிடம் மோதலாகிறது. “நீ பந்து வீசு அதில் ஜெயித்தால் மகனுக்கு சான்ஸ் தருகிறேன்” என்கிறார். 40 வயதாகும் தந்தை பந்து வீச.ரெடி ஆகிறார் அதன்.பிறகு நடப்பது என்ன என்பதை சுவாரஸ்யமுடன் படம்.கூறுகிறது.
படத்தில் வையாபுரி, ரியாஸ்கான் சரவணன் தவிர மற்ற எல்லோருமே புதுமுகங்கள் ஆனாலும் தங்கள் கதாபாத்திரங் களை நேர்த்தியாக செய்திருக் கின்றனர்.
டைட்டில் ரோலில் நடித்திருக்கும் ஶ்ரீனி சவுந்தர்ராஜன்தான் படத்தையும் இயக்கி உள்ளார். ஏதோ ஒரு படத்தை எடுத்தோம், இயக்கினோம் என்றில்லாமல் சஸ்பென்ஸ், ஆக்ஷன், ஃபேமலி என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் பாசிடிவ் வைபுடன் கதையை அமைத்து இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஶ்ரீனி சவுந்தர்ராஜன் வீட்டில் கார், பைக் வைத்திருந்தும் அதில் அலுவலகத்துக்கு செல்லாமல் ஆட்டோவில் தினமும் ஆபிஸ் செல்லும்போதே இவர் ஏன் இப்படி. செய்கிறார் ஏதோ பிளாஷ் பேக் இருக்கிறது என்பது புரிகிறது. தொடக்கம் முதல் நடிப்பில் ஒரே சாயலில் முக பாவனை வைத்து நடிக்கும் ஶ்ரீனி பிற்பகுதியில் பயிற்சியாளர் ரியாஸ் கானுடன் சவால் விட்டு 100 கிமீட்டர் ஸ்பீடில் பந்து வீச ஒப்புக் கொண்டு அதற்காக உடலை வருத்தி பயிற்சி எடுப்பதும் இதற்கிடையில் வரும் தடைகளை எதிர்கொள்வதுமாக விறுவிறுப்பு காட்டுகிறார்.
சச்சின், தோணி, விராட் என லேட்டஸ்ட் வீரர்களை தொடாமல் கபில் தேவ். ரசிகராக அவர் களமிறங்கி இருப்பது ஓல்ட் ஈஸ் கோல்ட் என்பதை காட்டுகிறது. 2k கிட்ஸ்களுக்கும் கபில் தேவ் யார் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.
மாங்கா குத்து பவுலிங் போட்டு ஶ்ரீனி அசத்துவது போல் பிளாஷ்பேக்கில் அவரது இள வயதுக்காரராக வரும் மாஸ்டர் பரத்தும் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தான் வீசிய பந்தில் பேட்ஸ்மேன் தலையில் அடிபட்டு செத்துவிட்ட தாக எண்ணி பயந்து நடுங்கி லாரியை பிடித்து வீட்டுக்கு ஒட்டம்பிடிப்பதும் அதே படத்தில் போலீஸை கண்டாலே நடுங்குவதுமாக நடிப்பில் மிளிர்கிறார்.
நிஜ பயிற்சியாளராக மாறியிருக்கும் ரியாஸ்கான் வில்லத்தனத்தை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். எப்படியும் வில்லனாகத்தான் வரப்போகிறார் என்று எண்ண வைக்கும் சரவணன் திடீர்.பாசக்காராராகி விடுகிறார். ஆட்டோக்காரர் வையாபுரி, ஶ்ரீனி மனைவியாக வரும் நிமிஷா, மகன் மாஸ்டர் ஜான் ஆகியோரும் வேடத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.
மனபலம் இருந்தும் உடல் பலமில் லாமல் சோர்வடைவதுபோல் பயிற்சிகளின் போது ஶ்ரீனி தன்னை காட்டுவதை தவிர்த்து இன்னும் எனர்ஜியுடன் தன் பாத்திரத்தை காட்டியிருந்தால் கூடுதல் பிளஸ் ஆக இருந்தி ருக்கும். எப்படியும் இந்த படத்தை விளையாட்டுக்கான பிரிவு படமாக காட்டி அரசிடம் வரி விலக்கு பெற முயலலாம்.
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது.
ஷியாம் ராஜ் கேமிரா காட்சிகளை கலர்புல்லாக தெளிவாக படமாக்கி யிருக்கிறது.
ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையில் பா.விஜய்யின் “தன்னைப்போலே ஒரு அன்பன், கண் இமைப்போலே ,,, காத்திடும் நண்பன்”-, சினேகனின் — “வானம் இனி தூரம் இல்லை வாழ்க்கை இனி பாரமில்லை, அருண்பாரதியின் ஹேப்பி மார்னிங் பாடல்கள் கேட்க.கேட்க உற்சாகம்.
ஶ்ரீனி சவுந்தர்ராஜன் முதல் படத்தை கமர்ஷியல் நோக்கம் இல்லாமல் ஒரு மோட்டிவேஷன் படமாக அளித்திருப்பது துணிச்ச லான.முயற்சி.
கபில் ரிட்டனஸ் – யூத்துக்கும், 40 கடந்தவர்களுக்கும் புது நம்பிக்கை.