Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எதிரிகளை அழிக்க முரட்டு சக்தியுடன் இறங்கும் சல்மான்கான்

சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச் சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித் தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான் கானின் தோற்றத்தில் இப்படத் தின் டிரைலர் பிற்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக் கின்றனர்.

இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் யதார்த்தமான ராவான ஆனால் கண்கவரும் விதமாக இருக்கும் என கூறுகிறார் சல்மான்கான். இந்த புதிய தோற்றம் டிரைலரிலி ருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். டைகர் தன்னுடைய விரோதிகளை அழிப்பதற்காக முரட்டு சக்தியுடன் வேட்டையில் இறங்குவார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரில்லரான டைகர்-3 தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.

“டைகர்-3யில் ஆக்சன் காட்சிகள் ராவாக, யதார்த்தமாக மற்றும் கண்கவருவதாக இருக்கும். இது சாதரணமாக இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும். இந்த டைகர் பட வரிசையில் நான் எதை விரும்புகிறேன் என்றால் தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்ள முடிகின்ற ஹிந்திப்படங்களின் பிரமாண்ட கதாநாயகனாக ‘டைகர்’ காட்டப் பட்டு இருப்பதுதான். அவனை சுற்றியுள்ள அனைவரையும் முடிக்கும் வரை இன்னும் நின்று கொண்டே அவன் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறான்” என்கிறார் சல்மான்கான்.

“டைகரின் ஹீரோயிசம் என்பது சவாலை முன்னெடுத்து செல்லும் போது பின்வாங்காமல் நிஜமான புலி எப்படி வேட்டையாடுமோ அதுபோல அவனுடைய இரையை வேட்டையாடுவதுதான். என்னுடைய கதாபாத்திரமான டைகர் சண்டையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டான். அவன் சுவாசிக்கும் வரை ஒருபோதும் விட்டுவிட மாட்டான்.. மேலும் இந்த நாட்டுக்காக போராடும் கடைசி மனிதனாக அவன் இருப்பான்” என்கிறார் சல்மான்கான்.

மேலும் அவர் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸ் மூலமாக பெரிய திரையில் ‘டைகர்’ எப்படி காட்டப்பட்டு இருக்கிறது என்பதை நான் ரசிக்கிறேன். அதுதான் ரசிகர்களின் ரசனையை இழுத்து பிடித்திருக்கிறது, அவர்கள் டைகரை ஆக்சனில் பார்க்க விரும்புகிறார்கள்.. ஏனென்றால் எப்போதும் பார்த்திராத கரடுமு ரடான மற்றும் கூலான ஆக்சன் காட்சிகளை பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் டைகர்-3 டிரைலரை விரும்புவார் கள் என நம்புகிறேன். ஏனென்றால் இன்றுவரை மக்கள் பார்த்திராத பித்துப்பிடிக்க வைக்கும் மூர்க்கத் தனமான ஆக்சன் தருணங்களை இது கொண்டுள்ளது” என்கிறார் .

மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர்-3’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புடன் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 100 சதவீத பிளாக்பஸ்டர் ரிசல்ட்டை வழங்கிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை ஆதித்யா சோப்ரா எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான அடுத்த அத்தியா யத்தை இந்தப் படம் வெளிப்படுத்த உள்ளது. இதுவரை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் வரிசையில் இப்போது டைகர் 3 இணைந்திருக்கிறது..

Related posts

யோகி பாபுவின் ‘சன்னிதானம்(P.O)’ பட முதல் பார்வை..

Jai Chandran

Kamal Hassan Wishes Kerala Chief Minister Over Phone

Jai Chandran

ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend