Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

“800” திரைப்பட விமர்சனம்

படம் : 800

நடிப்பு: மதுர் மிட்டல்,  மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம், நாசர்,  வேல ராமமூர்த்தி, ரியாத்விகா, அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், யோக் ஜாபி, சரத் லோஹித்ஷ்வவா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிரித்வி

லைன் புரட்யுசர்: கந்தன் பிட்சுமணி

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இயக்கம்: எம்.எஸ்.ஶ்ரீபதி

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா (D’One) ரேகா, நாசர்

இது கதையல்ல நிஜம் என்பார்களே அதுதான் 800 படத்தின் கதை. இது முத்தையா முரளிதரன் என்ற இலங்கை மலையக தமிழனின்  வாழ்க்கை போராட்டத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறது. இதன் கதையை கூற வேண்டுமென்றால் முத்தையா.முரளிதரனின்.  வாழ்க்கையைத்தான்   கூற வேண்டும். அதனால் நேரடியாக  வாழ்கை வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் பகுதிக்கு வந்து விடலாம்.

இலங்கையில் நடக்கும்.குண்டு வெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று அப்பாவி தமிழர்களை சிங்கள இன வெறியர்கள் தாக்கி கொள்கின் றனர். இதில் முரளிதரன் குடும்பமும் தப்பவில்லை. அவர் தந்தை வைத்திருந்த பிஸ்கெட் கம்பெனி எரித்து அழிக்கப்படு. கிறது இக்காட்சிகளை இதைவிட தத்ரூபமாக எடுக்க முடியாது என்றளவுக்கு ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தனது உழைப்பை வியர்வையாக சிந்தியிருப்பது லேசாக தெறிக்கவே செய்கிறது.

நான் ஒன்றும் செய்து சளைத்தவன் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் இரண்டு முறை குண்டு வெடிப்பு அரங்கை நிலை குலைய வைக்கிறார்.

எடிட்டர் பிரவீன்,  சவுண்ட்  டிசைனர் சம்பத் ஆழ்வார்,  சவுண்ட் மிக்ஸ் தபஸ் நாயக்  காஸ்ட்யூம் டிசனர் பூர்த்தி பிரவீன், விபின் பி ஆர், குறிப்பாக ஆர்ட் டைரக்டர் ( பெயர்  மிஸ்ஸிங்) இவர்களின் வேலை படத்துக்கு பெரும் பெரும் பங்காற்றியிருக்கிறது

முத்தையா முரளிதரன்  வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை முதலில் தேர்வு செய்திருந்தனர் அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதுடன் அந்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று போராட்டமே நடந்தது.  இதையடுத்து அப்படத்திலிருந்து அவர் விலகினார். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் அவருக்கு பதிலாக இப்படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுர் மிட்டல் தான்தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த வாய்ப்பு மதுர் மிட்டலை தேடி செல்லவில்லை மதுர் மிட்டலுக்காகத்தான் இந்த வாய்ப்பு இவ்வளவு போராடியிருக்கிறது என்றே தோன்றுகிறது. முத்தையா முரளிதரனே நடித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக, இவ்வளவு துணிவாக, இவ்வளவு உணர்வுடன் நடித்திருப்பாரா என்றால் நிச்சயம். முடிந்திருக்காது.

வந்தோமா முத்தையா போல்.பந்து வீசினோமா  நடையை கட்டினோமா என்றில்லாமல் எல்போ மடக்கி வைத்து தப்பாக பந்து வீசுகிறார் என்று அவர் மீது அம்பயர்கள் புகார் கூறும்போது அதை எண்ணி அவர் மனம் தளர்வதும் தான் தவறாக பந்து வீசவில்லை என்பதை நிரூபிக்க எதிரி நாடான இங்கிலாந்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு துணிச்சலாக ஒப்புக் கொள்வதெல்லாம் நிச்சயம்.பதிவு செய்யப்பட வேண்டிய வரலாறுதான். இதுபோல் நிறைய காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கு முன் கிரிக்கெட் வீரர்கள் கதை வந்திருக்கிறது அதில் சாதனைகள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது கூடுதலாக காதல் சொல்லப்பட்டி ருக்கிறது ஆனால் 800 படத்தில் சாதனையை இரத்தமும் சாசதையுமாக சொல்லியிருப்பது வெகு சிறப்பு.

இப்படத்தில் முக்கியமான ஒரு காட்சி  பிரபாகரனுடனான  முரளிதரன் சந்திப்பு மிக கவனமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.  கேப்டனாக ஆச்சர்யமான  பாத்திரத்தில்  வரும்போது  பொருத்தமாக இருக்கிறாரே என்று அட போட வைக்கிறார் நரேன். அவரது பேச்சும்  உண்மையை உடைத்து பேசுகிறது. இந்த பேச்சு வார்த்தையில் தனது கருத்தை முத்தையா எடுத்துச் சொல்வதை யும் தெளிவாக பதிவு செய்திருக்கி றார்கள்.

நாசர், மஹிமா நம்பியார், நரேன், கிங் ரத்னம்,,  வேல ராமமூர்த்தி, ரியாத்விகா, அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், யோக் ஜாபி, சரத் லோஹித்ஷ்வவா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிரித்விக் என யார் ஒருவரையும்  தேவையில்லாத வர்கள் என்று ஒதுக்கி விட முடியாது.

 

இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ் தான், ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்ச், 800வது விக்கெட் எடுக்க முத்தையா எடுக்கும் முயற்சி இருக்கையில் நிமிர வைக்கிறது.  எல்லாவற்றுக்கும்  பொறுப்பான இயக்குனர் எம் எஸ்.ஶ்ரீபதி பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

800 – இது வழக்கமான விமர்சனமும் இல்லை, இது வழக்கமான படமும்.இல்லை. அதற்கும் மேலான அற்புத படைப்பு.

 

 

லேடி

Related posts

Vijayantony’s KodiyilOruvan trailer..

Jai Chandran

’சந்திரமுகி 2’ பட கதாநாயகி யார்? லாரன்ஸ் அறிக்கை..

Jai Chandran

‘Ellam Ok Va’ hippest track from Bhediya

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend