Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ பொங்கல் ரிலீஸ்

லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமா வின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார்.

அவர்களின் சமீபத்திய வெளியீடு களின் தொடர்ச்சியான வெற்றி யைத் தொடர்ந்து, லைகா புரொடக்‌ ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால் சலாம்’ திரைப் படம் தயாராகி வருகிறது.
‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’..

இப்படத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினி காந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க,
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் இருந்து ‘மொய்தீன் பாய்’அவரது
கேரக்டர் போஸ்டர் பார்வையாளர் களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது மற்றும் ஊடகங்களில் மிகவும் சலசலப்பை உருவாக் கியது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள் ளார், பிரவின் பிரபாகர் படத் தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

ஜி.கே.எம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது லால் சலாம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப் பில் உருவான லால் சலாம்
திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Related posts

நல்லவரா? கெட்டவரா? “ஏஸ்” பட விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

Jai Chandran

ஜோ: சீனு ராமசாமி கண்ணீர் சிந்த வைத்த யுவன் குரல்

Jai Chandran

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா டீஸர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend