படம்: குஷி
நடிப்பு: விஜய தேவரகொண்டா, சமந்தா, சச்சின் கேதெர்கர், சரண்யா, முரளி சர்மா, ஶ்ரீ நிவாச ராவ், லட்சுமி, ரோகிணி, ஜெயராம்
தயாரிப்பு: நவீன் எமினேனி, ஒய். ரவிஷங்கர்
இசை: ஹேசாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு: முரளி.ஜி
இயக்கம்: சிவ நிர்வாணா
பி ஆர் ஒ: யுவராஜ்
கடவுள் நம்பிக்கை இல்லாத தந்தையின் மகன் விப்லவ் (விஜய் தேவராகொண்டா) , கடவுள் நம்பிக்கை கொண்ட பிரசங்க வித்வான் மகள் ஆராத்யா (சமந்தா). வேலைக்காக காஷ்மீர் செல்லும் விப்லவ் அங்கு ஆரத்யாவை பார்த்து காதல் கொள்கிறான் முதலில் பாகிஸ் தான் பெண் என்று சொல்லும் ஆராத்யா பின்னர் திருச்செந்தூர் என்று தெரிய வர விப்லவ் குஷியாகிறான். ஆராத்யாவும் விப்லவை காதலிக்கிறாள். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோரும் சம்மதிக்க மறுக்கின்றனர். அவர்களை மீறி இருவரும் திருமணம் செய்கி றார்கள்.ஆராத்யாவுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்டுகிறது அதற்கு ஜாதக கோளாறு காரணம் என்பதால் ஹோமம் செய்ய வேண்டும் என்று ஆராத்யாவின் தந்தை கூறுகிறார். நாத்திகவாதி யான விபலவ் தந்தை இதற்கு மறுக்கிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
வழக்கமாக காதலுக்கு குடும்பத் தினர் அல்லது ஒரு வில்லன் தடையாக இருப்பான் ஆனால் இதில் ஆத்திகம், நாத்திகம் கொள்கை கொண்டவர்கள் தடை யாக இருக்கின்றனர். விஜய் தேவர்கொண்டாவும், சமந்தாவும் தொடக்க காட்சிகளில் காஷ்மீரில் நடத்தும் காதல்.விளையாட்டு துள்ளலாக நகர்கிறது.
முஸ்லிம் பெண் பேகம் என்ற பெயரில் புர்கா அணிந்து.சமந்தா தோழியுடன் நடப்பதும் அவரை விஜய் தேவரகொண்டா காதலிப்ப தாக சொல்லி சுற்றிச்சுற்றி வருவதும் வழக்கமான காதல் காட்சிகள். சில சீன்களிலேயே இவர்கள் காதல் செட்டாகி கதை அடுத்த கட்டத்துக்கு செல்கிறது.
சமந்தா ரொம்பவே ஷட்லாக நடித்திருக்கிறார். ஆனால் சோக காட்சிகளில் கூட மேக்கப் அப்பியிருப்பது சீனுக்கு ஒட்டவில்லை.
கடவுள் உண்டா, இல்லையா? என்று டி வி விவாதத்தில் மோதிக் கொள்ளும் சீனிவாச ராவ், சச்சின் கேதெர்கர் இருவரில் யாருடைய கொள்கை ஜெயிக்கப்போகிறது என்ற விவாதத்தை கிளப்பிவிடும் இயக்குனர் சிவா அதை கிளை மாக்சில் பக்குவமாக கையாண்டு எந்த விவாதத்திலும் சிக்காமல் எஸ்ஸாகிரார்.
விஜய் தேவரகொண்டாவுடன் கோபித்துக்கொண்டு தன் வீட்டுக்கு திரும்பி வரும் சமந்தா வை தேடி அவர் வீட்டுக்கே விஜய் தேவரகொண்டா வந்து ஹோமம் செய்யத் தயார் என்றும் தன் தந்தையையும் ஹோமத்துக்கு வரக் கேட்டு கெஞ்சுவது சென்டிமென்ட் டச்.
கிளைமாக்சில் விஜய தேவர கொண்டாவின் தந்தை தன் கடவுள்.மறுப்பு கொள்கையை கைவிட்டு கோயிலில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்க வரும் போது அரங்கில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
நீண்ட நாளுக்கு பிறகு லட்சுமி பாட்டியாக வந்து, இவரா லட்சுமி என்று யோசிக்க வைக்கிறார்.
ரோகிணி ஜெயராம் ஜோடியின் குழந்தை பர்த்டே சென்டிமென்ட் சீன் தேவையற்ற திணிப்பு.
அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.. முரளி.ஜி கேமிரா காஷ்மீரை குளுமையாக படமாக்கி உள்ளது ஆனால் நீண்ட சில காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்க லாம்.
காதல் கதையை விவாதப் பொருளாகக் வேண்டும் என்பதற்காக கடவுள் மறுப்பு பாலிசி கதையை இயக்குனர் சிவா கையிலெடுத்து பின்னர் சூடு தாங்கள் சரண்டர் ஆகியிருப்பது போல் தோன்றுகிறது
குஷி – நார்மல்.

