Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் விமர்சனம்

வெப் (பட விமர்சனம்)

படம்: வெப்

நடிப்பு: நட்டி, ஷில்பா மஞ்சுநாத், சுப பிரியா மலர், ஷாஷ்வி பாலா, அனன்யா மணி, மொட்டை ராஜேந்திரன்

தயாரிப்பு: வி.எம்.முனிவேலன்

இசை: கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு:: கிறிஸ்டோபர் ஜோசப்

இயக்கம்: ஹாரூன்

பி ஆர் ஒ: கே எஸ் கே செல்வா

ஐ டி துறையில் பணிபுரியும் 3 இளம் பெண்கள் போதை மருந் துக்கு அடிமையாகி பஃப், பார் பாய் பிரண்ட்ஸ் என  இஷ்டத்துக்கு சுற்றுகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேர் மற்றும் அவர்களது தோழி உள்ளிட்ட 4 பேரை  திடீரென்று  நட்டி  கடத்துகிறார்.  பாழடைந்த் வீட்டுக்குள்  அடைத்து வைக்கப்படும் அவர்களை  பயமுறுத்துகிறார் எதிர்த்து பேசும் பெண்ணை கொலை செய்கிறார். மற்ற 3 பெண்களின் கதி என்ன? எதற்காக பெண்களை கடத்து கிறார் என்பதற்கு கிளைமாக்ஸ் எதிர்பாராத  பதில் அளிக்கிறது.

படத்தின் தொடக்கமே ஷில்பா மஞ்சுநாத், சுபப்.பிரியா மலர்   உள்ளிட்ட  ஹீரோயின்களின் கவர்ச்சி பஃப் ஆட்டத்துடன் ஜிவ்வென படம் பரபரக்கிறது. இவர்களின் போதை மருந்து பழக்கத்தை காட்டும்போது இப்படிக்கூடவா  ஐ டி யில் பணிபுரியும் பெண்கள் சீரழிகின்றனர் என்று கேள்வி எழுகிறது.

நான்கு பெண்களை கடத்தி  பாழடைந்த வீட்டில் நட்டி அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்யும்போது நட்டியா இவ்வளவு கொடூரமாக நடித்தி ருக்கிறார் என அதிர வைக்கிறார். முழுசா வில்லனாகவே மாறி விட்டார் போலிருக்கிறது என்று ஷாக் தருகிறார்.

ஷில்பா மஞ்சுநாத், சுபப் பிரியா மலர், ஷாஷ்வி பாலா, அனன்யா மணி நான்கு பேருமே பாழடைந்த வீட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து அதற்கான முயற்சியில் ஈடுபடும் போதெல் லாம் நட்டி வந்து அவர்களை வெளுப்பது அலறவிடுகிறது.

குறிப்பாக ஷில்பாவும் சுப பிரியா வும் நட்டியை நேருக்கு  நேர் எதிர்த்து  போராடுவது  போல்டான காட்சிகள்.  கார் சாவியை நைசாக எடுக்கச் செல்லும் சுப பிரியாவை நட்டி டக்கென பிடிதது இழுப்பது திக்.

மொட்டை ராஜேந்திரன் ஒரு காட்சியில் வந்து சிரிப்பூட்ட பார்க்கிறார்.

படத்தில் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்க வைப்பது. நட்டிதான் இவ்வளவு கொடூரமாக அவர் நடிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தாலும் கிளைமாக்சில் அவர் யார் என்பதை சொல்லும்போது நம்பமுடியாததாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் நியாப் படுத்தப்படுத்துவது எதிர்பாராத திருப்பம்.

கார்த்திக் ராஜா இசை அமைத் திருக்கிறார். முற்றிலும் புதிதாக  உருவெடுத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. இப்படத்துக்கு ஒரு தீம் மியூசிக் ஒன்றையும்  உருவாகி இருந்தால்  தனித்துவமாக தெரிந்திருக்கும். இப்போதும்  காலம்.கடந்துவிடவில்லை. ஸ்பெஷல்  தீம் மியூசிக் அமைத்து வெளியிடலாம்  அது அவருக்கும் படத்துக்கும் பிலாசாக  இருக்கும் .

கிறிஸ்டோபர் ஜோசப் இரன்டுவித கலர்  டோனில் காட்சியை படமக்கி யிருப்பது  வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. ஆர்ட் டைரக்டர், எடிட்டரும் நல்ல பங்களிப்பு செய்துள்ளனர்.

.எல்லாவற்றையும் ஒருங்கி ணைத்து போதை மருத்து அடிமைகளுக்கு இப்படியும் ட்ரீட்மென்ட் அளிக்கலாம் என்று சிந்தித்து படத்தை இயக்கியி ருக்கும் இயக்குனர் ஹாரூன் கோலிவுட்டில்  கவனிக்க தக்க  இயக்குநரராகியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் காமெடி தேவையில்லாத இணைப்பு என்றாலும்  ஒரு சின்ன ரிலாக்ஸ் கிடைக்கிறது.  அதையே இன்னமும் சில காட்சிகளில் சேர்த்திருந்தால் ஒரு காமெடி டிராக் கிடைத்திருக்கும்

வெப் – போதை மருந்து அடிமைகளுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்.

 

 

 

 

 

Related posts

Hai Lesso, Launched Grandly

Jai Chandran

Karnan #UttradheengaYeppov video song out tomorrow

Jai Chandran

52-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: விண்ணப்பங்கள் வரவேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend