படம்: ரெஜினா
நடிப்பு: சுனைனா, ரிதுமந்த்ரா, நிவாஸ். அதித்தன், பவா செல்ல துரை, அனத்நாக், விவேக் பிரசன்னா, கஜராஜ், தீனா
தயாரிப்பு: சதீஷ் நாயர்
இசை: சதீஷ்.நாயர்
ஒளிப்பதிவு: பவி கே பவன்
இயக்கம்: டொமின் டி. சில்வா
பி ஆர் ஒ: ஜான்சன்
வங்கி கொள்ளை நடத்தும் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருக்கும் ஊழியரை அடித்துக்கொல்கின்றனர். கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட கணவனுக்கு நியாயம் கேட்டு போலீஸ் நிலையத் துக்கு அலையாய் அலைகி றாள் ரெஜினா ( சுனை னா). ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளை இன்ஸ்பெக்டர் திட்டி விரட்டி விடுகிறார். கோபம் அடைந்த ரெஜினா தானே களத்தில் இறங்கி கொள்ளையர்களை எப்படி கண்டுபிடித்து பழி வாங்கு கிறாள் என்பதே கிளை மாக்ஸ்.
கணவனின் கொலைக்கு பழிவாங்கும் கதையென் றாலும் அதை விஜய சாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் களமாக அமைக்காமல் சராசரி ஒரு.பெண் பழி வாங்க துணிந்தால் அவள் எப்படியெல்லாம் காய் நகர்த்துவாள் என்பதை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள் .
போலீஸ் நிலையத்தில் கிடையாய் கிடக்கும் சுனைனாவை அங்குள்ள ரைட்டர் விரட்டிக் கொண்டே இருப்பதும் ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக் டரை சுனைனாவை விரட்டியடிப்பதும் எந்த பெண்ணாக இருந்தாலும் ஆத்திரம் அடையத்தான் செய்வார் அதைத்தான் சுனைனாவும் செய்கிறார்.
திடீரென்று வீட்டைவிட்டு கிளம்பும் சுனைனா கேரளா செல்வதும் அங்கு பீச் ரிசார்ட்டில் வேலை செய்வதும் அங்குள்ள பெண்ணிடம் நெருக்கம் காட்டுவதும் கதை வேறு பக்கம் திசைக்கு திரும்பி விட்டதோ என என்ன வைக்கிறது. பின்னர் அந்த பெண் யாருடைய மனைவி என்பது தெரிய வரும்போது கதை சரியாகத்தான் செல்கிறது என தெளிவாகிறது.
சுனைனாவுக்கு பழிவாங்கும் எண்ணம் இருக்கும் நிலையில் அதை பல காட்சிகளில் சரியாக வெளிப்படுத்த தவறியிருக்கிறார். கிளைமாக்ஸ் நெருக் கத்தில் கொஞ்சம் கோபம் தெரிகிறது. கணவனை கொன்றது யார் என்று தெரிந்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினாலும் முகத்தில் தெறிக்க வேண்டிய கோபம் மிஸ்ஸிங்.
படத்தில் மற்ற நடிகர்கள் கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர். பவா செல்லத்துரை ஆங்காங்கு பொங்கு கிறார். விவேக் பிரசன்னா யாருக்கு சப்போர்ட் என்பதில் தெளிவில்லை.
சதீஷ் நாயர் தயாரித்தி ருப்பதுடன் இசை அமைப் பாளராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். ரகத் துக்கு ஒரு பாடல் என்று அசத்தியுள்ளார். சூறாவளிபோல பாடல் உதட்டில் ஒட்டிக்கொள் கிறது. நரநரன்னு என்ற ரவுடிகள் பாடலும் தினாவின் ஆட்டமும் புதுரகம்.
பவி கே பவன் ஒளிப்பதிவு எதார்த்தம்.
இயக்குனர் டொமின் டி சில்வா, திரைக்கதை புதிது என்றாலும் விறுவிறுப்பு இல்லாமல் காட்சிகளை நகர்த்தியி ருப்பது சோர்வை ஏற்படுத் துகிறது. மலையாளத். துக்கு ஒ கே, தமிழ் ரசிகர்களுக்கு விறுவிறு போதாது.
ரெஜினா – ஆக்ஷன் படம் ஆனால் ஆக்ஷன் குறைவு.

