Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அழகிய கண்ணே ( பட விமர்சனம்)

படம்: அழகிய கண்ணே

நடிப்பு: லியோ சிவகுமார் (அறிமுகம்),  சஞ்சிதா ஷெட்டி, சுஜாதா, பிரபு சாலமன், ராஜ்கபூர், பானு, அமுதவாணன்,  கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

தயாரிப்பு: எஸ்தல் என்டர் டெயினர் தயாரிக்க கண்ணன் ரவி வழங்குகிறார்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

ஒளிப்பதிவு: அசோக்குமார்

இயக்குனர்: ஆர்.விஜயகுமார்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்த இளைஞன் இன்பா (லியோ சிவகுமார்).பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேர  வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அவரது எதிர் வீட்டில் வசிக்கிறார் அய்யர் வீட்டுப் பெண் கஸ்தூரி ( சஞ்சிதா ஷெட்டி). இன்பா, கஸ்தூரி இருவரும் காதலிக்கி றார்கள். இந்த காதலுக்கு கஸ்தூரி வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. இந்நிலை யில் இன்பா இயக்குனர் பிரபுசாலமனிடம்  உதவி இயக்குனராக சேர சென்னை செல்கிறார் இன்பா.  கஸ்தூரியும் வேலை கிடைத்து சென்னை வருகிறார். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். கோபம் அடைந்த கஸ்தூரியின் முறைமாமன் இன்பாவை பழிவாங்க முடிவு செய்கி றான். இதன் முடிவு அதிர்ச்சியாக அமைகிறது.

லியோ சிவகுமார் புதுமுக ஹீரோவாக அறிமுகமாகி இயல்பாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.  சஞ்சிதா ஷெட்டியுடன் நடத்தும் காதல் சிணுங் களும் எல்லை மீறாதது ஆறுதல்.

அம்மாவிடம் தன் காதலுக்கு சம்மதம் வாங்க சினிமா கதை சொல்வ தாக தனது காதல் கதையை சொல்லி சம்மதம் வாங்குவது அழகு.

ராஜ்கபூரின் அடியாட்கள் எரித்து தள்ளும்போது தண்ணீரில் குதித்து  மீண்டும் ஆவேசமாக எழுந்து வரும் சிவகுமார் அடியாட்களை துவம்சம் செய்வதில் வேகம் உண்டு. நடன காட்சியிலும் சோடை யில்லை.

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மகன்தான் லியோ விஜயகுமார். பிரபலமா னவரின் மகன் என்ற பந்தா எதுவும் காட்டாமல் இயக்குனர் சொன்ன  வேலையை கேரக்டரோடு ஒன்றி  செய்திருப்பது நலம்.

வெறும் காதல் கதையாக மட்டுமல்லாமல் திருமணத் துக்கு பிறகு தனிக்குடித் தனம் நடத்தும் புதுஜோடிக்கு அதுவும் இருவரும் வேலைக்கு போகும் ஜோடிக்கு குழந்தை பிறந்தால்  குழந்தையை கவனித்துக் கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை லியோ சிவகுமாரும்  சஞ்சிதாவும் உணர்வுபூர்வமாக வெளிப் படுத்தி உள்ளனர். ஆனால் மகன் மீது அவ்வளவு பாசம் காட்டும் சிவாவின் தாயார் வந்து குழந்தை யை கவனித்துக் கொள்ளாதது ஏன்?

கிளைமாக்சை திடீரென்று முடித்திருப்பது ஷாக்.

சர்ப்ரைஸ் விஷயமாக விஜய் சேதுபதியின் காட்சி அமைந்திருக்கிறது. இயக்குனர் பிரபு சாலமன் இயக்குனராகவே நடித்தி ருக்கிறார்.

இயக்குனர் ஆர்.விஜய குமார் சீனுராசாமியின் தம்பி என்பதை கதைக் கருவை கையாண்ட வித்தில் நிரூபித்திருக் கிறார். ஒவ்வொரு சாதியையும் அடுக்கி அதற்கு மேல் வந்து உட்கார்ந்திருந்தால் எங்கள் மீதே கைவைத் தால் விடுவோமா என்று ராஜ்குமார் பேசும் வசனத்தில் உள்ள கொடூரத்தை நாசுக்காக இயக்குனர் சொல்வதில் ஆயிரம் அர்த்தம் புதைந்தி ருக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசை மெல்லிசையாக ஒலிக் கிறது.

அசோக்குமார் கேமரா அழகோவியமாக காட்சி களை படமாக்கி உள்ளது

அழகிய கண்ணே – மேல்ஜாதியின் வன்மம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ பட முன்னோட்டம் வெளியீடு 

Jai Chandran

BodhaiKaname from OhManapenne

Jai Chandran

3rd Single 90sKID from NaaiSekar.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend