Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

படிப்பை யாராலும் பறிக்க முடியாது – மாணவர்கள் விழாவில் விஜய் பேச்சு

தமிழ்நாட்டில் 234 தொகுதி யிலும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரை யில் இன்று நடந்தது,

மாணவ, மாணவியர்க ளுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கினார் நடிகர் விஜய். பின்னர் அவர் பேசியதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோ ருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.
நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சி யில் பேசுவது இது தான் முதல் முறை. மனதிற்கு ஏதோ பெரிய பொறுப் புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன்.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப் பேன் என்று கூற விரும்ப வில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

இந்த விழா நடத்துவதற் கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம், ” உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக்கொள் ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்பதுதான். முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள்.

நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப் பவர்கள் நீங்கள் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள் ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது. உதாரண மாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக் கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளி களில் மாணவர் களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டு களில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு விஜய் பேசினார்.

Related posts

எம் எல் ஏ ஆகும் உதயநிதிக்கு பி ஆர் ஓ சங்கம் வாழ்த்து

Jai Chandran

நடிகர் எஸ் வி சேகருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கேடயம்

Jai Chandran

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend