படம் டக்கர்
நடிப்பு: சித்தார்த், திவ்யன் ஷா, யோகிபாபு, அபிமன்யூ சிங், விகீஷ் காந்த், முனிஸ்காந்த், ராமதாஸ்
தயாரிப்பு: சுதன் சுந்தரம், ஜெயராம்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு:வாஞ்சிநாதன் முருகேசன்
இயக்கம்: கார்த்திக் ஜி கிரிஷ்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா
கால் டாக்சி ஓட்டும் டிரைவர் சித்தார்த் தன் கண்ணில் தேவதையாக படும் திவ்யன் ஷாவை காதலிக்கிறார். ஆனால் இது திவ்யன் ஷாவுக்கு தெரியாது. திவ்யன் ஷாவை ஒரு கூட்டம் கடத்துகிறது இதில் சித்தார்த்தின் கார் விபத்தில் சிக்கி சேதமாகிறது. காரை சேதப்படுத்தியதற்காக சித்தார்த்தை கால் டாக்சி ஓனர் அடித்து துன்புறுத்துவதுடன் சம்பளம் வாங்காமல் பல வருடங் களுக்கு டிரைவர் வேலை செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கு கிறார். வாழ்க்கை வெறுத்து சாக துணியும் சித்தார்த் வீம்பாக ரவுடிகளிடம் தகராறு செய்கிறார். திடீரென்று சித்தார்த்துக்கு தைரியம் பிறந்து ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். இந்நிலையில் கடத்தப்பட்ட திவ்யன் ஷா சித்தார்த் கையில் கிடைக்கிறார். திவ்யன் ஷாவை சித்தார்த்திடமிருந்து பிடித்து அவரது தந்தையிடம் ஒப்படைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்க ரவுடிகள் முயல்கின்றனர். இதற்கிடையில் சித்தார்த்துக்கும் திவ்யனுக்கும் காதல் பிறக்கிறது இந்த பூனை எலி துரத்தலில் இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஆக்ஷனுடன் விளக்குகிறது டக்கர்.
கமர்ஷியல் ஆக்ஷன் கவர்ச்சி என பொழுதுபோக்குடன் ஜாலியாக ஒரு படமாக உருவாகயிருக்கிறது டக்கர்.
சித்தார்த்தை அடிதடி காட்சிகளில் இதுவரை பார்த்ததுபோல் தெரிய வில்லை இப்படத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து ஆக்ஷன் காட்சி களில் நடித்து ஆச்சரியப்படுத்து கிறார்.
காதல் காட்சியிலும், முத்தக் காட்சியில் கமலை சித்தார்த் மிஞ்சுவார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் அவரது இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுத் திருக்கிறார் திவ்யன் ஷா. கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டி இளசுகளை சூடேற்றுகிறார்.
வில்லன் அபிமன்யூ சிங் வில்லத்தனத்தை விட யோகி பாபுவுடன் சேர்ந்து காமெடி கொட்டம் அடித்திருக்கிறார். கார் சேசிங்கிலேயே வில்லன் கூட்டம் நேரத்தை கடத்துகிறது. திடீரென்று வில்லன் கூட்டத்துடன் வந்து ஒட்டிக் கொள்கிறார் முனிஸ்காந்த்
சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் மெலடியும், வெஸ்டர்னும் கேட்கும் ரகம்.
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு பளிச்
கார்த்திக் ஜி கிரிஷ் காமெடியுடன் பொழுது போக்கு படம் தந்துள்ளார்.
டக்கர் புதுசில்லை.

